- Advertisement -
Homeவிளையாட்டுதென் ஆப்பிரிக்காவுடன் மோதல்.. அணியை விட்டு தனியே சென்ற ராகுல் டிராவிட்.. அடுத்த சம்பவத்துக்கு ரெடி...

தென் ஆப்பிரிக்காவுடன் மோதல்.. அணியை விட்டு தனியே சென்ற ராகுல் டிராவிட்.. அடுத்த சம்பவத்துக்கு ரெடி தான்..

- Advertisement-

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத வலிமை மிக்க இந்திய அணி தனது அடுத்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. நாளை (நவம்பர் 5) நடைபெற இருக்கும் இந்த போட்டிக்காக இந்திய அணி கொல்கத்தா வந்துள்ளது.

கொல்கத்தாவில் தரையிறங்கிய இந்திய அணியினர் விமான நிலையத்தில் இருந்து, ஓட்டலுக்கு புறப்பட்டனர். விமான நிலையத்தில் இருந்து இந்திய அணியினரின் பேருந்து கிளம்பியதும், ராகுல் டிராவிட் மற்றும் அவரது குழுவினர் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக போட்டி நடைபெறும் மைதானம் நோக்கி பயணித்தனர்.

மைதானம் விரைந்த ராகுல் டிராவிட் போட்டி நடைபெறும் பிட்ச்-இல் சுமார் கால் மணி நேரம் செலவிட்டார். இவருடன் பி.சி.சி.ஐ. சார்பில் நியமிக்கப்பட்டு இருக்கும் மைதான தலைவர்கள், பிட்ச் கமிட்டி, அசிஷ் போமிக் மற்றும் பொறுப்பாளர் சுஜன் முகர்ஜீ ஆகியோரும் களத்தில் இருந்தனர்.

இந்த மைதானம் பேட்டிங் செய்ய ஏதுவான களம் கொண்டிருக்கும் என்றும், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்றாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. ராகுல் டிராவிட் வருகை மற்றும் பிட்ச் பற்றி அவர் கூறிய கருத்துக்களை பொறுப்பாளரான முகர்ஜி தெரிவித்து இருக்கிறார். அவர் கூறுகையில்,

- Advertisement-

“தலைமை பயிற்சியாளருக்கு பிட்ச் திருப்தியளிக்கும் வகையில் இருந்ததாக தெரிகிறது. ஈடனில் நல்ல விக்கெட்டுகளை கொடுத்திருக்கிறோம். பவுன்ஸ் சிறப்பானதாகவும், பேட்டர்கள் தங்களின் ஷாட்களுக்கு சிறந்த மதிப்பை பெறும் வகையில் இருக்கும். ஆனால், பாட்டம் லைனில் சரியாக விளையாட வேண்டும்.

வங்காளதேசம் அணியின் பேட்டிங்கை வைத்து ஈடன் கார்டன் பிட்ச் சரியானதாக இருக்காது என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கடந்த அக்டோபர் 31-ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேசம் அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 32.3 ஓவர்களில் இந்த இலக்கை எட்டி, அபார வெற்றி பெற்றது.

அந்த வகையில் ஈடன் கார்டன்ஸ் பிட்ச் கடுமையான ஒன்றாகவே இருக்கும். இதில் பேட்டர்கள் சரியான லைனில் சிறப்பாக ஆடி ரன் குவிக்க முடியும். தற்போதைய இந்திய அணி இந்த களத்தில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யும் படச்த்தில், அவர்களால் நிச்சயம் 300-க்கும் அதிக ரன்களை இலக்காக நிர்ணயிக்க முடியும் என்று மைதான பொறுப்பாளர்கள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்று முன்