- Advertisement 3-
Homeவிளையாட்டுஇதான் கடைசி சான்ஸ்.. 2007ல் தவறவிட்ட அதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தட்டித் தூக்குவாரா டிராவிட்?..

இதான் கடைசி சான்ஸ்.. 2007ல் தவறவிட்ட அதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தட்டித் தூக்குவாரா டிராவிட்?..

- Advertisement 1-

இந்திய அணியை மிகச் சிறந்த முறையில் ரோஹித் ஷர்மா வழிநடத்தி வந்தாலும் அதையெல்லாம் தாண்டி அவர்கள் சிறப்பாக விளங்குவதற்கு மிக முக்கியமான ஒரு காரணமும் இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருபவர் தான் ராகுல் டிராவிட். முன்னாள் இந்திய கேப்டன் என்பது அணியின் பயிற்சியாளராக இருக்க கூடுதல் சாதகமாகவும் பார்க்கப்பட்டு வரும் நிலையில், அவரது பல திட்டங்கள் இந்திய அணி வெற்றிகளை குவிக்க காரணமாகவும் இருந்துள்ளது.

இந்திய அணியை ஒரு காலத்தில் எப்படி வழிநடத்தினாரோ அதே போல பயிற்சியாளராகவும் தனது பணியை சிறப்பாக செய்து வந்த ராகுல் டிராவிட்டின் தலைமை பயிற்சியாளர் காலம் இந்த டி 20 உலக கோப்பையுடன் முடிவடைய உள்ளது. இன்னும் பதவிக்காலத்தை நீட்டிக்க ரோஹித் கேட்டுக் கொண்டும் டிராவிட் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்திய அணியில் தற்போது நிறைய இளம் வீரர்கள் அனுபவம் வாய்ந்த ரோஹித், கோலி உள்ளிட்டவர்களுடன் இணைந்து ஆடுவதற்கும் ராகுல் டிராவிட் தான் முக்கிய காரணமாக இருந்து வருகிறார். ஜெய்ஸ்வால் உள்ளிட்ட பல இளம் வீரர்களை U 19 உலக கோப்பைத் தொடர்களில் சிறப்பாக மெருகேற்றி அவர்கள் சர்வதேச அரங்கில் தடம் பதிக்கவும் காரணமாக இருந்தது ராகுல் டிராவிட் தான்.

இப்படி இந்திய அணி இன்று நல்ல இடத்தில் இருப்பதற்கு ராகுல் டிராவிட் ஒரு பயிற்சியாளராக முக்கிய பங்கு வகித்தாலும் ஐசிசி கோப்பை மட்டும் இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு உலக கோப்பைத் தொடரில் சச்சின், கங்குலி, சேவாக் என நிறைந்திருந்த இந்திய அணியை ராகுல் டிராவிட் தான் வழிநடத்தி இருந்தார்.

- Advertisement 2-

இப்படி தலைச்சிறந்த வீரர்கள் பலர் இருந்த போதிலும் லீக் சுற்றில் வங்காளதேச அணிக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி அடைந்ததுடன் இலங்கை அணிக்கு எதிராகவும் தோற்க நேர்ந்ததால் அத்துடன் கிளம்பும் நிலையும் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணிக்கு உருவாகி இருந்தது. அந்த சமயத்தில் இந்திய அணியை சுற்றி கடும் விமர்சனங்களும், எதிர்ப்புகளும் உருவாக தனது கேப்டன் பதவியில் இருந்து பின்னர் விலகிக் கொண்டார் ராகுல் டிராவிட்.

இதன் பின்னர் தான் இந்திய அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டு ஐசிசி கோப்பைகளையும் வென்றிருந்தனர். தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் ஐசிசி கோப்பையை சொந்தமாக்கும் பாக்கியம் ராகுல் டிராவிட்டிற்கு கிடைக்காத நிலையில், ஒரு பயிற்சியாளராக அதனை வென்று முடிக்கும் ஒரு பொன்னான வாய்ப்பும் தற்போது கிடைத்துள்ளது.

டி20 உலக கோப்பைத் தொடர் நடந்து வரும் இதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தான் 2007 ஆம் ஆண்டு உலக கோப்பைத் தொடரில் தோல்வியுடன் வெளியேறி இருந்தார் ராகுல் டிராவிட். தற்போது அதே மண்ணில் தங்களின் பயிற்சியாளரான டிராவிட்டிற்காக நிச்சயம் இந்திய அணி வீரர்கள் கோப்பையை சொந்தமாக்கி பிரியா விடை கொடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்