- Advertisement 3-
Homeவிளையாட்டுடி20 உலக கோப்பை ஜெயிக்க பல மாசத்துக்கு முன்னாடியே ரோஹித் செஞ்ச விஷயம்.. எமோஷனல் ஆன...

டி20 உலக கோப்பை ஜெயிக்க பல மாசத்துக்கு முன்னாடியே ரோஹித் செஞ்ச விஷயம்.. எமோஷனல் ஆன டிராவிட்..

- Advertisement 1-

இந்திய அணி டி20 உலக கோப்பையை கைப்பற்றி இருந்த நிலையில், இதற்கு முக்கிய காரணமாக ரோஹித் செய்த விஷயம் ஒன்று அமைந்திருந்த தகவல், கிரிக்கெட் ரசிகர்களை எமோஷனல் ஆக்கி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் உலக கோப்பையில் விளங்கி இருந்தவர் தான் ராகுல் டிராவிட்.

சச்சின், கங்குலி, சேவாக், தோனி, யுவராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் இருக்க நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், லீக் சுற்றிலேயே வங்காளதேச அணிக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்திய அணி, இலங்கைக்கு எதிராகவும் தோற்று அத்துடன் வெளியேறி இருந்தது.

இதனால், இந்திய வீரர்கள் மீது பெரிய அளவில் எதிர்ப்புகளும், கண்டனங்களும் உருவாகி இருந்தது. வங்காளதேச அணிக்கு இந்திய அணி தோற்றதே கொந்தளிக்க வைக்க, கேப்டன் ராகுல் டிராவிட் மீதும் நெருக்கடி அதிகமாக இருந்தது. அவர் தலைமை பொறுப்பை துறக்க வேண்டும் என வெளிப்படையாகவே கருத்துக்கள் முன் வைக்கப்பட, அதே முடிவை எடுத்து அதிர்ச்சி அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து வீரராக ஆடி வந்த ராகுல் டிராவிட், அடுத்த சில ஆண்டுகளில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினையும் அறிவித்திருந்தார். டெஸ்ட் போட்டி மற்றும் ஒரு நாள் போட்டிகள் அனைத்திலும் தனது பேட்டிங் மற்றும் கீப்பிங் திறனால் இந்திய கிரிக்கெட் பயணத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ராகுல் டிராவிட்டால் ஏனோ உலக கோப்பையை மட்டும் சொந்தம் கொண்டாட முடியாமல் போனது.

- Advertisement 2-

இதனைத் தொடர்ந்து, U 19 இந்திய அணி உள்ளிட்ட பல அணிகளுக்கு பயிற்சியாளராக விளங்கி அவர்கள் முத்திரை பாதிக்க காரணமாக இருந்த டிராவிட், இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். வீரராக இருந்து உலக கோப்பை வெல்ல முடியாமல் இருந்தாலும், இந்திய அணியின் பயிற்சியாளராக எட்டிப் பிடிப்பார் என அனைவருமே கருதினர்.

ஆனால், அதுவும் ஒரு சில வாய்ப்புகளில் தவறிப்போக, எந்த தவறும் செய்யாமல் டி20 உலக கோப்பையை உச்சி முகர்ந்து பயிற்சியாளராக ஓய்வு பெற்றுள்ளார் ராகுல் டிராவிட். அவர் உலக கோப்பையை பெற்றுக் கொண்டதும் அதனை கொண்டாடிய விதமும் கூட ரசிகர்களை கலங்க வைத்திருந்தது.

இதனிடையே, ரோஹித் ஷர்மா குறித்து ராகுல் டிராவிட் சொன்ன விஷயங்கள் அதிக கவனம் பெற்று வருகிறது. 2023 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பையின் இறுதி போட்டியில் தோல்வி அடைந்த பின் ராகுல் டிராவிட்டை அழைத்து பயிற்சியாளராக தொடரும்படி அறிவுறுத்தி உள்ளார் ரோஹித் ஷர்மா.

இது பற்றி டிராவிட் பேசுகையில், “என்னை பயிற்சியாளராக தொடர்வதற்காக நவம்பர் மாதத்தில் அழைத்ததற்கு நன்றி ரோஹித். உங்கள் ஒவ்வொருவருடனும் பணிபுரிந்ததை எனது பாக்கியமாக கருதுகிறேன். ஒரு கேப்டனாகவும், பயிற்சியாளராகவும் நானும் ரோஹித்தும் நிறைய நேரம் உரையாடி உள்ளோம்” என உருக்கத்துடனும் குறிப்பிட்டுள்ளார் ராகுல் டிராவிட்.

சற்று முன்