கே.எல் ராகுல் குறித்து டிராவிட் கொடுத்த விளக்கம்.. மறுபுறம் கொண்டாட்ட போஸ்டரை வெளியிட்ட சஞ்சு சாம்சனின் மனைவி

- Advertisement -

இலங்கையும் பாகிஸ்தானும் கூட்டாக நடத்த உள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நேபாள அணியும் பாகிஸ்தான் அணியும், பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரில் மோத உள்ளது. இந்தியா தனது முதல் ஆட்டத்தை பாகிஸ்தான் அணிக்கு எதிராக செப்டம்பர் இரண்டாம் நாள் அன்று இலங்கையில் உள்ள கண்டியில் தொடங்குகிறது.

சிறந்த பேட்ஸ்மேன்கள், பௌலர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் என சிறப்பான அணியாக உள்ள இந்திய அணிக்கு நடுவரிசையில் களமிறங்கும் வீரர்கள் சரியாக ஆடினால் இந்த ஆசியக் கோப்பை போட்டியை வெல்ல நல்லதொரு வாய்ப்பு இருக்கிறது. ஆசியக் கோப்பை போட்டியை வெல்வது வரவிருக்கும் உலகக்கோப்பை போட்டியை வெல்ல நல்ல ஒரு ஊக்கமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை

- Advertisement -

கடந்த வாரம் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கர் 31 வயதான இந்திய நட்சத்திர வீரர்கள் கேஎல் ராகுல் ஆசிய கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என தெரிவித்திருந்தார். அதை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் இன்று உறுதிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்: கே.எல். ராகுலின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஆசிய கோப்பையின் ஆரம்ப கட்ட போட்டிகளில் அவர் விளையாடாமல் இருப்பதை பெரிய பின்னடைவாக நாங்கள் கருதவில்லை. உலகக் கோப்பை போட்டிகள் நெருங்கும் நிலையில் அவரை நாங்கள் பாதுகாப்பாக வைத்திருப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளோம்.

- Advertisement -

முதல் இரண்டு ஆட்டங்களில் அவர் விளையாடாமல் இருப்பது அவருக்கு நல்லதொரு ஓய்வாக அமையும். அதற்குள் அவர் குணமடைந்து மீதமுள்ள மற்ற போட்டிகளில் பங்கு பெறுவார் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆஸ்திரேலியா தொடரும் வரவிருக்கிறது ஆனால் நான் அதைப் பற்றி பெரிதாக கவலை கொள்ளவில்லை. ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஆகிய இருவருமே அவர்களது வாழ்நாளில் நிறைய கிரிக்கெட்டை விளையாடி உள்ளனர். எனவே நாங்கள் அவர்களுக்கு கொஞ்சம் கால அவகாசத்தை கொடுக்க வேண்டும் என கூறினார்.

இந்த நிலையில் பேக்கப் வீரராக ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் கேஎல் ராகுலுக்கு மாற்றாக முதல் இரண்டு போட்டிகளில் விளையாட கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அந்த இரண்டு போட்டிகளில் அவர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் அவரே ஆசிய கோப்பை முழுவதும் இந்திய அணியில் தொடரவும் வாய்ப்புகள் உள்ளன.

இந்த நிலையில், இன்று ஓணம் பண்டிகை என்பதால் சஞ்சு சாம்சனின் மனைவி ஓணம் திருநாளில் அவரும் சஞ்சு சாம்சனும் இருப்பது போன்ற மகிழ்ச்சியான ஒரு புகைப்படத்தை சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதை கண்ட சஞ்சுவின் ரசிகர்கள், நீங்கள் இந்திய அணியில் சிறப்பாக விளையாடி கிரிக்கெட் வாழ்விலும் இதே போன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்