- Advertisement 3-
Homeவிளையாட்டு75 சதவீதம்.. டி20 ஃபைனலிலும் மழைக்கு வாய்ப்பு?.. ரிசர்வ்டு தினத்திலும் மழை பெஞ்சா என்ன நடக்கும்.....

75 சதவீதம்.. டி20 ஃபைனலிலும் மழைக்கு வாய்ப்பு?.. ரிசர்வ்டு தினத்திலும் மழை பெஞ்சா என்ன நடக்கும்.. பரபர ரிப்போர்ட்..

- Advertisement 1-

கிரிக்கெட் போட்டிகளை பல்வேறு கட்ட விறுவிறுப்புக்கு மத்தியில் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்து வரும் நிலையில் திடீரென ஏமாற்றமான விஷயங்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான். உலகக்கோப்பை தொடர்கள் நடைபெறும் போது அந்த நாட்டில் அந்த சமயத்தில் இருக்கும் வானிலை ஒரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

லீக் போட்டி, சூப்பர் 8 போட்டி மற்றும் நாக் அவுட் போட்டிகள் என எதை எடுத்துக் கொண்டாலும் மழை பெய்து ஒரு போட்டியின் முடிவே மாற்றுவதால் சில அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதிலும் கூட நெருக்கடி உருவாகும்.

தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் கூட லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி அடைந்திருந்த இங்கிலாந்து அணி, மழை காரணமாக ஒரு போட்டியில் ஆட முடியாமல் போயிருந்தது. இதனால் மற்ற போட்டிகளின் முடிவுகளையும் அவர்கள் எதிர்நோக்கி காத்திருக்க வேண்டிய இக்கட்டான சூழலும் உருவாகி இருந்தது.

இதனால் பலம் வாய்ந்த அணிகளாக இருந்தாலும் கூட போட்டிக்கு மத்தியில் மழை பெய்தால் அல்லது போட்டி தொடங்குவதற்கு முன்பு மழை பெய்தாலும் அதன் முடிவை மாற்றி அமைத்து அடுத்தடுத்த போட்டிகளில் திருப்புமுனையும் ஏற்படும். அந்த அளவுக்கு வானிலை ஒரு பெரிய விஷயமாக பார்க்கப்படும் நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி இருந்த அரையிறுதி போட்டியிலும் கூட மழை பல முறை பெய்து அதன் முடிவில் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement 2-

அப்படி ஒரு சூழலில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோத உள்ள இறுதி போட்டிக்கு நடுவே மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் பார்படாஸ் மைதானத்தில் இறுதிப் போட்டியில் மல்லுக்கட்ட உள்ளது. இங்கே 75% மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை அறிக்கை தெரிவிக்கும் நிலையில், 190 நிமிடங்கள் கூடுதலாக இந்த போட்டியை முடிப்பதற்கும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இங்கே போட்டி தொடங்குவதற்கு தாமதமாகி வந்தாலும் குறைந்தபட்சம் 10 ஓவர்கள் வீதம் போட்டி அந்த நாளில் நடத்தப்படலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி 10 ஓவர்கள் வீதம் கூட போட்டியை நடத்த முடியாமல் போனால் ரிசர்வ்டு தினமான 30 ஆம் தேதி போட்டி மாற்றப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய தினத்தில் எங்கு போட்டி நிறுத்தப்பட்டதோ அதிலிருந்து போட்டி தொடரும்.

அப்படி முந்தைய தினம் முழுவதும் மழையால் ரத்தானால், ரிசர்வ்டு தினத்தில் 10 ஓவர் போட்டிகளாக நடத்தவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் அதே வேளையில், ரிசர்வ்டு தினத்திலும் போட்டி மழை காரணமாக ரத்தனால் சூப்பர் ஓவர் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அப்படி சூப்பர் ஓவரும் நடத்த முடியாத பட்சத்தில் இந்த டி20 உலக கோப்பை சவுத் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா என இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் தெரிகிறது.

இதனால் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையின் வெற்றியாளர்களாக இந்த இரு அணிகளுமே சேர்த்து அறிவிக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. டி20 உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில் மழை பெரிய அச்சுறுத்துதலாக இருப்பதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அதையும் தாண்டி இரு அணிகளில் ஒன்று கோப்பையை கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சற்று முன்