- Advertisement 3-
Homeவிளையாட்டுகரண்ட் பில் கட்டாத ராய்ப்பூர் மைதானம்.. ஒரு மேட்ச் நடத்த ஜெனரேட்டருக்கு மட்டும் இம்புட்டு கோடியா.....

கரண்ட் பில் கட்டாத ராய்ப்பூர் மைதானம்.. ஒரு மேட்ச் நடத்த ஜெனரேட்டருக்கு மட்டும் இம்புட்டு கோடியா.. அதிர்ந்து போன ரசிகர்கள்

- Advertisement-

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெற்று வரும் சூழலில், இதுவரை 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த நான்கு போட்டிகளின் முடிவில், இந்திய அணி 3 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தி உள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி, சிறப்பாக ஆடி பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வென்று அசத்தி உள்ளது. ருத்துராஜ், ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் என பல இளம் வீரர்கள் இந்த தொடரின் மூலம் சர்வதேச அரங்கிலும் தங்கள் திறனை நிரூபித்துள்ளனர்.

இந்திய அணி ஒரு பக்கம் வெற்றிகளை குவித்தாலும், நான்காவது டி 20 போட்டியில் இரு அணிகளும் மோதி இருந்த ராய்ப்பூர் மைதானம் குறித்து சில அதிர்ச்சியூட்டும் தகவல்களும் வெளியாகி இருந்தது. ராய்ப்பூரில் உள்ள ஷாஹித் வீர் நாராயண் சிங் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் நேற்று (01.12.2023) மோதி இருந்தது. இந்த மைதானம் சார்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணத்தை அடைக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

- Advertisements -

சுமார் 3.16 கோடி ரூபாய் வரை மின் கட்டணம் நிலுவையில் இருந்து வருவதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கே மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு துறை என இரண்டும் மின் கட்டணத்தை கட்டாமல் மாறி மாறி குற்றம் கூறி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றது. இதனால், நேற்றிரவு தொடங்கிய போட்டியை எப்படி நடத்துவார்கள் என ரசிகர்கள் பக்கம் ஒரு கேள்வியும் எழுந்தது.

இதற்கு மத்தியில், மைதானத்தின் கேலரிகள் மற்றும் இருக்கைகளுக்கு தற்காலிக மின்சாரமும், மற்ற இடங்களுக்கு ஜெனரேட்டர் மூலமும் நேற்று மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் தான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதிய டி 20 போட்டி நடந்து முடிந்திருந்தது. இந்த நிலையில், தற்போது ஜெனெரேட்டர் மற்றும் தற்காலிக மின்சாரத்திற்கான செலவு குறித்து மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement-

அதன்படி, சுமார் 1.4 கோடி ரூபாய் செலவில் ஜெனெரேட்டர் மற்றும் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பணம் கொடுக்காமல் மொத்தமாக அதை அடைத்து விடலாம் என்று ஒரு பக்கமும், விளையாட்டுத் துறையில் பணம் இருந்தும் இப்படி அலட்சியமாக இருப்பது சரியாக படவில்லை என்றும் பலர் பல விதமான கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.

சற்று முன்