- Advertisement -
Homeவிளையாட்டுகவலையே வேண்டாம், தோனி இதெல்லாம் மட்டும் செஞ்சா போதும். மனுஷன் 6 மாசத்துல ஐபிஎல்-கு ரெடி...

கவலையே வேண்டாம், தோனி இதெல்லாம் மட்டும் செஞ்சா போதும். மனுஷன் 6 மாசத்துல ஐபிஎல்-கு ரெடி ஆகிடுவாரு – பயிற்சியாளர் ராஜாமணி பேச்சு

- Advertisement-

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது குஜராத் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த 2022-ஆம் ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்து வெளியேறியிருந்த சென்னை அணியானது மீண்டும் பலமாக கம்பேக் கொடுக்கும் என்று தோனி தெரிவித்திருந்தார்.

அதன்படியே இந்த ஆண்டு அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சி.எஸ்.கே அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று ஆச்சரியப்படுத்தியது. சென்னை அணிப்பெற்ற இந்த மகத்தான வெற்றிக்கு காரணம் தோனியின் அற்புதமான கேப்டன்சியும் ஒரு காரணம் என்பது நாம் அறிந்தது.

இந்த ஆண்டு பின் வரிசையில் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்த தோனி கேப்டன்சியிலும் அசத்தியிருந்தார். ஆனால் இந்த ஒரு சீசன் முழுவதுமே அவர் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மெதுவாக ஓடியது, நொண்டி நொண்டி நடந்தது, முட்டியில் ஐஸ் பேக் வைத்தது என வலியால் அதிகமாக அவதிப்பட்டார்.

அதோடு ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு மும்பை சென்ற அவர் தனது முழங்கால் காயத்திற்கான அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக செய்து கொண்டார். இந்நிலையில் அந்த அறுவை சிகிச்சையிலிருந்து தோனி எவ்வாறு படிப்படியாக குணமடைவார் என்பது குறித்து ராஜஸ்தான் அணியின் உடற்பயிற்சி நிபுணரான ராஜாமணி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement-

இது குறித்து அவர் கூறுகையில் : இது போன்ற கிரிக்கெட் போட்டிகளில் காயம் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். தற்போது அறுவை சிகிச்சை முடித்துக் கொண்டுள்ள தோனி 6-7 நாட்கள் மருத்துவமனையிலேயே டாக்டர்களின் அறிவுரைப்படி ஓய்வில் இருப்பார். அதன் பின்னர் பிசியோதெரபியின் கவனம் தோனியின் பக்கம் செல்லும். அவர் 80 சதவீதம் தோனிக்கான பயிற்சிகளை வழங்குவார்.

அதேபோன்று உடற்பயிற்சி நிபுணரும் அவருக்கான மீதமுள்ள 20% சதவீத பயிற்சிகளை வழங்குவார். முதல் வாரத்தில் எளிமையாக ஆரமித்து போகப்போக பயிற்சியானது படிப்படியாக கடுமையாகும். இப்படி இருந்தால் அவர் 6 முதல் 8 மாத காலத்தில் மிகச்சிறப்பாக காயத்திலிருந்து முழுவதுமாக மீண்டு வருவார்.

இதையும் படிக்கலாமே: வீடியோ: 1 பால்ல 18 ரன்கள். கிரிக்கெட் வரலாற்றுளையே இப்படி ஒரு மோசமான பந்தை பாத்திருக்க முடியாது. களைகட்டும் TNPL போட்டிகள்

ஒரு வேலை நான் தோனிக்கு இப்போது பயிற்சி கொடுப்பதாக இருந்தால், அவருக்கு காலில் அடிபட்டுள்ளதால் உடலின் கீழ் பகுதிக்கு நான் எந்த ஒரு பயிற்சியும் இப்போது தரமாட்டேன். அதே சமயம் உடலின் மேற்பகுதியில் அதிக கவனம் செலுத்தி, கைகள், வயிற்றுப்பகுதி (புஷ், புல் ) போன்றவற்றிக்கு பயிற்சிகள் கொடுப்பேன். அதோடு அவருடைய எனெர்ஜியை அதிகப்படுத்த பாக்ஸிங், ரோப் போன்ற பயிற்சிகளை கொடுப்பேன். 4 முதல் 6 வாரங்கள் இப்படி இருக்கும். அதே வேலையில் கால்களும் இந்த காலகட்டத்தில் தேறிவரும். பிறகு படிப்படியாக கால்களுக்கான பயிற்சிகளை துவங்குவேன் என்றும் கூறியுள்ளார் ராஜாமணி.

சற்று முன்