இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற முடிந்த 16 வது ஐபிஎல் தொடரின் போது தமிழக வீரர் அஷ்வின் “ஹல்லா போல் கொஞ்சம் நல்லா போல்” என்று கூறி பல்வேறு போட்டிகள் தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து வந்தார். அப்படி அஸ்வின் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவிலும் ஒரு நபர் அவருடன் தொடர்ந்து பயணித்து வந்தார். அவர் தான் கிரிக்கெட் வீரர்களுக்கு பிரத்தேகமாக உடற்தகுதி(பிட்னஸ்) பயிற்சிகளை வழங்கும் ஒரு பிட்னஸ் நிபுணர் ராஜாமணி.
அவர் சாமீபத்தில் ஒரு பேட்டியின் போது பாப் டூ பிளெசிஸ்ஸோடு தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற ஒரு டி20 லீக் தொடரின் போது நான் அங்கு ஒரு குறிப்பிட்ட அணிக்காக ஃபிட்னஸ் பயிற்சியினை வழங்கி வந்தேன். அப்போது நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் எனது அணியைச் சேர்ந்த வீரர்களுக்கு பயிற்சியினை வழங்கிக் கொண்டிருந்தேன்.
மற்றொருபுறம் அதே ஹோட்டலில் தங்கியிருந்த டூ பிளெஸ்ஸிசும் பயிற்சி மேற்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் நான் டி காக் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோருக்கு பயிற்சி அளித்து கொண்டிருந்தேன். டூபிளெஸ்ஸிஸ் தனியாக இரண்டு மணிநேரம் பயிற்சி செய்து கொண்டிருந்தார். அவர் இப்படி இரண்டு மணி நேரம் பயிற்சி செய்வதற்குள் நான் நான்கு வீரர்களை பிட்னஸ் பயிற்சியில் தயார் செய்து அனுப்பி வைத்தேன். அப்போது என்னை பார்த்த அவர் உங்களிடம் பேச முடியுமா? என்று என்னிடம் இன்டர்நேஷனல் கெத்தோடு கேட்டார். நானும் பேசலாம் சொல்லுங்கள் என்று கூறினேன்.
அப்போது இரண்டு மணி நேரம் நான் செய்த பயிற்சி சரியா? என்று கேட்டார். அதற்கு நானும் ப்ரொபஷனலான பயிற்சியாளர் போல் சொல்லவா? அல்லது இந்திய பயிற்சியாளர் போல் சாதாரணமாக சொல்லவா? என்று கூறினேன். அவர் பரவாயில்லை ஒரு ப்ரொபஷனலான பயிற்சியாளர் போன்று உங்களது கருத்துக்களை கூறுங்கள் என்று சொன்னார். அப்போது நான் : நீங்கள் செய்யும் பயிற்சி தவறானது. ஏனெனில் நாளை உங்களுக்கு போட்டி இருக்கும்போது இரண்டு மணிநேரம் பயிற்சி செய்தால் உங்களால் நாளைய போட்டி முடிந்து காலையே நகர்த்தவே முடியாது என்று கூறினேன். உடனே அவர் நக்கலாக என்னிடம், இந்த பயிற்சியை இவ்வளவு நேரம் இப்படி தான் செய்ய வேண்டும். உங்களுக்கு தெரியுமா என்றார். உடனே நான் கூறினேன், எனக்கு இது தெரியும் ஆனால் உடலுக்கு இது தெரியாது, உடற்பயிற்சி அறிவியலுக்கும் இது தெரியாது. இப்படி செய்தால் நிச்சயம் உங்களால் உங்கள் கால்களை நகர்த்த முடியாது என்றேன்.
அதன் பிறகு மீண்டும் ஒருமுறை அதே தொடரில் நான் அவரை பார்த்தபோது அவர் என்னிடம் வந்து “நீங்கள் ஒரு ஜீனியஸ்”, நீங்கள் சொன்னது போன்று என்னால் இரண்டு நாட்களாக காலை நகர்த்த முடியவில்லை என்று கூறினார். மேலும் இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்றும் என்னிடம் கேட்டுக் கொண்டார். அப்போது நான் : நீங்கள் காயத்திலிருந்து சமீபத்தில் தான் மீண்டு வந்து உள்ளீர்கள் அதனால் அதற்கு ஏற்றவாறு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினேன். மேலும் சரியான பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே உங்கள் உடற்தகுதியை தொடர்ச்சியாக சிறப்பாக வைத்திருக்க முடியும் என்று கூறினேன். அந்த தருணத்தில் தான் அவருக்கு என் மீது நம்பிக்கை வந்தது.
அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த அந்த தொடருக்கு பின்னர் இரண்டு நாட்கள் என்னுடன் தங்கி தனிப்பட்ட முறையில் பயிற்சியினை மேற்கொண்டார். அதுமட்டும் இன்றி தென்னாப்பிரிக்கா வந்து எனக்கு பயிற்சியை தர முடியுமா? என்று கேட்டுக்கொண்டார். ஆனால் நான் அவ்வளவு தூரம் வர முடியாது, வேண்டுமென்றால் துபாயில் பயிற்சி மேற்கொள்ளலாம் என்று கூறினேன்.
இதையும் படிக்கலாமே: தோனியின் முதல் கிரிக்கெட் பேட் ஸ்பான்சரின் தற்போதைய நிலை. இன்று வரை மைதானத்தில் நேரில் ஒரு போட்டியை கூட அவர் கண்டதில்லையாம்.
அவரும் ஒப்புக்கொண்டு இரண்டு வாரங்கள் என்னிடம் துபாயில் பயிற்சி எடுத்துக் கொண்டார். அதன் பிறகு தற்போது நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் போதும் என்னை சந்தித்து : நீங்கள் அளித்த பயிற்சியினால் தற்போது நான் முன்பை விட பிட்டாக இருக்கிறேன். அதோடு என்னால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடிகிறது என்றும் டூபிளெஸ்ஸிஸ் கூறியதாக ராஜாமணி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.