- Advertisement 3-
Homeவிளையாட்டுஆர்சிபி சாபம் யாரை விட்டுச்சு.. ராஜஸ்தானுக்கு நேர்ந்த கதி.. உற்சாகத்தில் துள்ளிக் குதித்த காவ்யா..

ஆர்சிபி சாபம் யாரை விட்டுச்சு.. ராஜஸ்தானுக்கு நேர்ந்த கதி.. உற்சாகத்தில் துள்ளிக் குதித்த காவ்யா..

- Advertisement 1-

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை குவாலிஃபயர் முதல் போட்டியில் வீழ்த்தி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இதனைத் தொடர்ந்து இவர்களுடன் இறுதி போட்டியில் மே 26 ஆம் தேதி ஆடப் போவது யார் என்பதை பற்றி தான் ஒரு ட்விஸ்ட் இருந்து வந்த நிலையில் அதற்கான முடிவும் தற்போது கிடைத்துள்ளது.

முதல் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ், குவாலிஃபயர் 2 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டிருந்தது. குவாலிஃபயர் 2 மற்றும் ஃபைனல் ஆகிய இரண்டுமே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் இதில் குவாலிஃபயர் 2 போட்டி தற்போது நடந்து முடிந்துள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 அவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்திருந்தது. ஹைதராபாத் அணியின் பேட்டிங் வரிசை மிக பலமாக இருந்தாலும் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் போல்ட் முக்கிய விக்கெட்டுகளை எடுத்து சிறிய நெருக்கடியையும் கொடுத்திருந்தார். மூன்றாவது வீரராக வந்த ராகுல் திரிபாதி, 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவுட்டாக, ஹென்ரிச் க்ளாஸன் 50 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார்.

இவர்களைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாததால் 175 ரன்களை ஹைதராபாத் எடுத்திருந்தது. ராஜஸ்தான் தரப்பில் போல்ட் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் டாம் கோஹ்லர் மிக தடுமாற்றத்துடன் ஆட, பத்து ரன்கள் மட்டும் எடுத்து அவுட்டாகி இருந்தார்.

- Advertisement 2-

ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் மூன்று சிக்ஸர்களுடன் 42 ரன்கள் எடுத்திருந்தார். ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட் ஆனதால் சிறிய நெருக்கடியும் ராஜஸ்தானுக்கு உருவாகி இருந்தது. பத்து ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 73 ரன்களை ராஜஸ்தான் எடுத்திருந்ததால் கடைசி 60 பந்துகளில் 103 ரன்கள் வேண்டும் என்ற நிலையும் உருவாகி இருந்தது.

ஆனாலும், ரியான் பராக் மற்றும் அஸ்வின் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாக, 79 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது ராஜஸ்தான். இதனைத் தொடர்ந்து வந்த ஹெட்மயர் மற்றும் போவெல் ஆகியோர் ரன் சேர்க்க சிரமப்பட, மறுபுறம் ஜூரேல் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். ஆனால், ரன் ரேட் அதிகம் தேவைப்பட்டதால் ராஜஸ்தான் அணிக்கு எந்த விதத்திலும் ஜூரேலின் அதிரடி உதவவில்லை. 12 பந்துகளில் 52 ரன்கள் வேண்டுமென்ற நிலையில், ராஜஸ்தானால் 20 ஓவர்களில் 138 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால், ஹைதராபாத் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும் தற்போது முன்னேறி உள்ளது. பிளே ஆப் சுற்றில் ஆர்சிபியை வீழ்த்தி முன்னேறிய எந்த அணியும் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை என்ற நிலையில், ராஜஸ்தானுக்கு அதே கதி தான் நடந்துள்ளது.

சற்று முன்