- Advertisement 3-
Homeவிளையாட்டுஒரே ஒரு முறை எலிமினேட்டரில் மோதிய ஆர்சிபி, ராஜஸ்தான்.. 9 வருஷம் கழிச்சு மீண்டும் நடக்குமா...

ஒரே ஒரு முறை எலிமினேட்டரில் மோதிய ஆர்சிபி, ராஜஸ்தான்.. 9 வருஷம் கழிச்சு மீண்டும் நடக்குமா அந்த ட்விஸ்ட்..

- Advertisement 1-

நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்த சீசனே முடிவுக்கு வர இன்னும் நான்கு போட்டிகள் மீதம் இருக்கிறது. குவாலிஃபயர் 1 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் அகமதாபாத் மைதானத்தில் மோதுகின்றன. இதனைத் தொடர்ந்து நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகள் மோதுகின்றன.

தொடர்ந்து கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இதில் தோல்வி அடையும் அணி, பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் மோதி அதில் வெற்றி பெறும் அணிக்கு இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பும் கிடைக்கும்.

இந்த நான்கு அணிகளுமே ஒவ்வொரு குறிப்பிட்ட விஷயங்களில் பலமாக இருப்பதால் போட்டி ஒவ்வொன்றும் தீயாய் பறக்கவுள்ள நிலையில் யார் யார் இறுதி போட்டிக்கு முன்னேறி இந்த முறை கோப்பையை கைப்பற்றுவார்கள் என்பதை தெரியும் ஆவலிலும் ரசிகர்கள் அனைவரும் உள்ளனர். மேலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்ட அணிகளில் கொல்கத்தா இரண்டு முறையும், ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தலா ஒரு முறையும் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

ஆனால் இந்த நான்கு அணிகளில் ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத அணி என்றால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மட்டும்தான். கடைசி ஆறு போட்டியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று முன்னேறி உள்ள பெங்களூரு, இன்னும் மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றாலே முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி விடலாம்.

- Advertisement 2-

முன்னதாக கடந்த 15 நாட்களுக்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடத்திலும், பெங்களூரு அணி கடைசி இடத்திலும் இருந்த நிலையில் தற்போது அப்படியே புள்ளி பட்டியல் மாறி இந்த இரு அணிகளுமே எலிமினேட்டர் 1 போட்டியில் மோதும் நிலையும் உருவாகியுள்ளது. மே மாதத்தில் ஒரு போட்டி கூட ராஜஸ்தான் வெல்லாத நிலையில், பெங்களூர் அணி இந்த மாதத்தில் ஒரு போட்டி கூட தோல்வியடையவில்லை. இப்படி ஒரு இக்கட்டான சூழலில் தான் இந்த இரு அணிகளும் எலிமினேட்டர் போட்டியில் மோதுகின்றன.

அப்படி இருக்கையில் இந்த இரண்டு அணிகளும் இதற்கு முன்பாக ஒரே ஒருமுறை ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் மோதி இருந்தபோது நடந்த முடிவு என்ன என்பதை தற்போது பார்க்கலாம். கடந்த 2015 ஆம் ஆண்டு பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதி இருந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 180 ரன்கள் எடுக்க டிவில்லியர்ஸ் அதிகபட்சமாக 66 ரன்கள் எடுத்திருந்தார்.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி, 19 ஓவர்களில் 109 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் ஆர்சிபி அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த போட்டிக்கு முன்னேற்றம் கண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 9 வருடத்திற்கு முந்தைய தோல்விக்கு ராஜஸ்தான் பழிவாங்குமா அல்லது மீண்டும் ஆர்சிபி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சற்று முன்