- Advertisement 3-
Homeவிளையாட்டுகை நழுவிய போட்டியை தனியாளாக மீட்ட பட்லர்.. பீஸ் பீஸாய் போன நரைனின் சரித்திர சாதனை..

கை நழுவிய போட்டியை தனியாளாக மீட்ட பட்லர்.. பீஸ் பீஸாய் போன நரைனின் சரித்திர சாதனை..

- Advertisement 1-

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டிகளும் தற்போது விறுவிறுப்பாக தான் நடைபெற்று வருகிறது. ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில் பல்வேறு சாதனைகள் அடித்து நொறுக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளும் மோதி இருந்தது.

ராஜஸ்தான் அணி முதலிடத்திலும், கொல்கத்தா அணி இரண்டாவது இடத்தில் புள்ளி பட்டியலில் இருக்கும் சூழலில் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் இடத்தை பலமாக தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு சூழலில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

அதன்படி ஆடி இருந்த கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுனில் நரைன் தனக்கு வரும் பந்துகளை நாலா புறமும் மைதானத்தில் பறக்க விட்டிருந்தார். இதுவரை 500 டி 20 போட்டிகளுக்கு மேல் ஆடியுள்ள சுனில் நரைன் தனது முதல் சதத்தை இந்த போட்டியில் தான் பதிவு செய்திருந்தார்.

அது மட்டுமில்லாமல் இந்த சதத்தின் மூலம் அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் டாப் 5 லிஸ்டில் முன்னேறி உள்ள சூழலில், கொல்கத்தா அணியும் 223 ரன்கள் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியில் வழக்கம் போல தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் மீண்டும் ஒரு முறை ஏமாற்றம் அளித்துள்ளார்.

- Advertisement 2-

ஒன்பது பந்துகளில் 19 ரன்கள் எடுத்த அவர் அவுட்டாக பின்னர் வந்து கேப்டன் சஞ்சு சாம்சனும் 12 ரன்களில் அவுட்டாகி இருந்தார். ஐந்து ஓவர்களில் அதிரடியாக ஆடி ராஜஸ்தான் அணி 53 ரன்கள் எடுத்திருந்தாலும் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை அவர்கள் இழந்திருந்தது ஒரு சிறிய பிரச்சினையாகவும் மாறி இருந்தது. இதற்கிடையே, இளம் வீரர் ரியன் பராக் 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரது விக்கெட்டிற்கு பின்னர், ராஜஸ்தான் அணியின் ரன் சரிந்து விக்கெட்டும் விழ தொடங்கியது.

இதனால், கடைசி 6 ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 96 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் பட்லர் மற்றும் போவெல் இருக்க, போவெல் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனிடையே, 3 ஓவர்களில் 46 ரன்கள் வேண்டுமென்ற சூழலில், ஸ்டார்க் வீசிய 18 வது ஓவரில் 18 ரன்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து, 19 வது ஓவரில் 19 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி ஓவரில் 9 ரன்கள் போதும் என்ற நிலை உருவானது. 7 விக்கெட்டுகளை இழந்து இலக்கை நெருங்க முடியாமல் தவித்து கொண்டிருந்த ராஜஸ்தான் அணியை தனியாளாக நிமிர வைத்திருந்தார் பட்லர்.

கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து பட்லர் சதமடித்திருந்த நிலையில், அடுத்த 3 பந்துகளை டாட் செய்தார். இதனால், 2 பந்துகளில் 3 ரன்கள் வேண்டுமென்ற நிலையும் உருவானது. 5 வது பந்தில் இரண்டு ரன்கள் எடுக்கப்பட, கடைசி பந்தில் சிங்கிள் எடுத்து த்ரில் வெற்றியை உறுதி செய்தார் பட்லர். மேலும் இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணியும் முதலிடத்தை பலமாக தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்