- Advertisement 3-
Homeவிளையாட்டுஅவர உ.கோ-ல விளையாட வைங்க... இல்லாட்டி கஷ்டம் தான்... அவர் இல்லாத அணி அரைகுறையா தான்...

அவர உ.கோ-ல விளையாட வைங்க… இல்லாட்டி கஷ்டம் தான்… அவர் இல்லாத அணி அரைகுறையா தான் இருக்கும்.. முன்னாள் இலங்கை கேப்டன் அதிரடி பேச்சு

- Advertisement 1-

உலகக்கோப்பை போட்டிகள் அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் அதற்காக தயாராகி வருகிறது. இந்திய அணி ஏற்கனவே இந்த உலக கோப்பைக்கான வீரர்களின் பட்டியலை வெளியிட்டு அந்த பட்டியலில் உள்ள பலருக்கும் ஆசிய கோப்பையில் வாய்ப்பையைம் வழங்கி உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் பவுலிங்கில் இருக்கும் சிக்கல் குறித்து இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா தனது கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இந்திய அணியில் சிறந்த ஆல்-ரவுண்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஸ்பின்னர்களாகவும் செயல்படுகிறார்கள். ஆனால் அணியில் இரண்டு தரமான ஸ்பின்னர்கள் இருக்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை. இந்திய பிட்ச்களில் விளையாட நிச்சயம் அணியில் நிறைய ஸ்பின்னர்கள் தேவை. அப்படி இல்லை என்றால் அது இந்திய அணிக்கு பாதகமாக அமையும்.

குலதீப் யாதவ் அணியில் இருக்கிறார், அவர் போட்டியையே மாற்றக்கூடிய வகையிலும் பவுலிங் செய்கிறார். அதை நாம் ஆசிய கோப்பையில் பாக்கிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் பார்த்தோம். ஆனால் அவருக்கு துணையாக இன்னொரு ஸ்பின்னர் இருப்பது அவசியம். ஏன் என்றால் அவரை நிச்சயம் எதிரணி வீரர்கள் டார்கெட் செய்வார்கள்.

குறிப்பாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியூஸிலாந்து போன்ற அணிகளோடு விளையாடும் பொழுது, அணியை பாதிக்காத வகையில் மூன்று ஸ்பின்னர்கள் அணியில் இருப்பது அவசியம். அதே போல இந்திய அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் பவுலிங் செய்வதில்லை. ஜடேஜா மட்டுமே 7வது இடத்தில இறங்குகிறார்.

- Advertisement 2-

பாக்கித்தான், இங்கிலாந்து போன்ற அணிகளை எடுத்துக்கொண்டால் அதில் சரியான ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். இந்திய அணி உலககோப்பைக்கு முன்பு இந்த விடையத்தில் கவனம் செலுத்தும் என்று நம்புகிறேன். அவர்கள் அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா போன்ற ஆல்-ரவுண்டர்களையே அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் அஸ்வின் போன்ற தரமான ஸ்பின்னர்கள் அணியில் இருப்பது அவசியம் என்பது என் கருத்து.

அவர் விளையாடினால், நிச்சயம் அவர் மேட்ச் வின்னராக இருப்பார். அவருக்கு சற்று வயதாகி இருக்கலாம், பீல்டிங்கில் ஸ்லோவாக இருக்கலாம். ஆனால் ரன்களை கண்ட்ரோல் செய்து விக்கெட் எடுக்கக்கூடிய அவரை போன்ற பவுலர் அணிக்கு தேவை. பெரும்பாலான போட்டிகளில் வெற்றிபெற விரும்பும் அணிகள், சமநிலையான ஆல்ரவுண்ட் தாக்குதலைக் கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்துவது அவசியம் என்று கூறியுள்ளார் ரணதுங்கா.

சற்று முன்