- Advertisement 3-
Homeவிளையாட்டு3 - 4 மாசமா இருந்த பிரச்சனை.. தடை எல்லாம் தாண்டி மேட்ச் ஜெயிச்சு கொடுத்தது...

3 – 4 மாசமா இருந்த பிரச்சனை.. தடை எல்லாம் தாண்டி மேட்ச் ஜெயிச்சு கொடுத்தது இதுனால தான் – ரஷீத் கான்..

- Advertisement 1-

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் சமீபத்தில் மோதி இருந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்திருந்தது என்பதில் மாற்று கருத்தே கிடையாது. போட்டி முழுக்க முழுக்க இரு அணிகளும் வெற்றி பெறும் நிலையை உருவாக்கிக் கொண்டு போராடி சென்று கொண்டிருந்த நிலையில் தான் கடைசி சில ஓவர்களில் போட்டியை குஜராத் அணியின் வீரர்கள் மாற்றி எழுதி வைத்தனர்.

சற்று கடின இலக்கை நோக்கி ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, முதல் பத்து ஓவர்களில் 76 ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால் கடைசி பத்து ஓவர்களில் 121 ரன்கள் வேண்டும் என்ற நிலையும் உருவானது. கில்லைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாருமே நல்ல பங்களிப்பை அளிக்காததால் தோல்வி பாதையை நோக்கி அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

இதனால் கடைசி ஆறு ஓவர்களில் 86 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் நிச்சயமாக அவர்கள் தோற்று விடுவார்கள் என்று தான் அனைவருமே கருதினர். ஆனால் கடைசி கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை ரஷீத் கான் மற்றும் ராகுல் தெவாட்டியா ஆகியோர் கையில் எடுக்க கடைசி பந்தில் இரண்டு ரன்கள் வேண்டும் என்ற போது ஃபோர் அடித்து போட்டியை முடித்து வைத்திருந்தார் ரஷீத்.

தொடர்ந்து தோல்விகளில் தடுமாறி வந்த குஜராத் அணிக்கு இந்த வெற்றியின் மூலம் தன்னம்பிக்கையையும் அணிக்குள் உருவாகி உள்ளது. ஒரு விக்கெட்டை கைப்பற்றியதுடன் கடைசி பந்தில் ஃபோர் அடித்து 11 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ரஷீத் கான் ஆட்ட நாயகன் விருதினையும் வென்றிருந்தார்.

- Advertisement 2-

இதற்குப் பின் பேசிய ரஷீத் கான், “விக்கெட் எடுப்பதையும் ரன் அடிப்பதையும் விட அணிக்காக வெற்றி பெறுவது தான் எனக்கு முக்கியமானது. நான் எங்கு பந்தை போட வேண்டும் என விரும்பினேனோ, அங்கு சரியாக பந்தை வீசியது எனக்கு பேட்டிங் செய்யவும் அதிகமான எனர்ஜியை கொடுத்திருந்தது.

சர்ஜரிக்கு பின்பாக கடந்த நான்கு முதல் மூன்று மாதங்கள் நான் அதிகமாக பந்து வீசவில்லை. பந்தில் எனக்கு சரியான க்ரிப் எனக்கு அமையாமல் இருந்த நிலையில் கடந்த போட்டிக்கு பின் நான் சிறப்பாக பந்து வீசி பயிற்சி எடுத்து தயாரானேன். இதனால் மீண்டும் என்னுடைய சிறந்த பந்து வீச்சில் முன்னேறவும் முடிந்தது. எனது பந்து வீச்சை ரசித்து நான் வீசியதுடன் மூன்று முதல் நான்கு சிக்ஸர் அடிப்பதே தேவை என்பதால் அந்த நேரத்தில் நீங்கள் பாசிட்டிவாக இருக்க வேண்டும்” என ரஷீத் கான் கூறியுள்ளார்.

சற்று முன்