- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்த தமிழக வீரர் இந்திய அணியில் மிக முக்கியமான ஒரு வீரராக வருவார் பாருங்க. அவர...

இந்த தமிழக வீரர் இந்திய அணியில் மிக முக்கியமான ஒரு வீரராக வருவார் பாருங்க. அவர வலை பயிற்சியில முதல் முறையா பாத்ததுமே எனக்கு அவரோட திறமை தெரிஞ்சிடுச்சி – அடித்துச் சொல்லும் ரஷீத் கான்

- Advertisement 1-

இந்த வருட ஐ.பி.எல் போட்டியானது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. எஞ்சி இருப்பது பைனல் மட்டுமே. எல்லா ஆண்டை போல இந்த வருடமும், பேட்டிங், பௌலிங் இப்படி அனைத்திலும் தனித்துவமாக விளங்கும் பல புதிய சிறப்பான வீரர்களை ஐ.பி.எல் போட்டி நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. அந்த வகையில் குஜராத் அணிக்காக விளையாடும் சாய் சுந்தரும் அந்த வரிசையில் இருக்கிறார்.

நேற்று முன்பைகு எதிராக நடந்த பொடியை பொறுத்தவரை குஜராத் அணி, 233 ரன்கள் அடித்தது. அந்த போட்டியில் சப்மன் கில் அபாரமாக விளையாடி 60 பந்துகளில் 129 ரன்களை குவித்தார். அதே சமயம் அவருக்கு உறுதுணையாக இருந்து அவரோடு கைகோர்த்து மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்தார் தமிழக வீரரான சாய் சுதர்சன்.

நேற்றைய போட்டியில் சாய் சுதர்சன் 31 பந்துகளை சந்தித்து அதில் 43 ரன்களை குவித்திருந்தார். அதில் 5 பௌண்டரிகளும் ஒரு சிக்சரும் அடக்கம். போட்டியின் இறுதி கட்டத்தில் அவர் ரிட்டயர்டு அவுட் ஆகா, அவருக்கு பதிலாக காலத்திற்கு வந்த ரஷீத் கான் 2 பந்துகளில் 5 ரன்களை எடுத்தார். இந்த நிலையில் ரஷீத் கான் சாய் சுதர்சன் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்,

சாய் சுதர்சன் ஒரு மகத்தான வீரர், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் இந்திய அணிக்காகவும் விளையாடக்கூடிய ஒரு வீரராக இருக்கப்போகிறார். என்னை பொறுத்தவரை அவர் ஒரு வித்யாசமான வீரர். இந்த ஆண்டு மட்டும் அல்ல, நான் முதன் முதலில் அவரை வலை பயிற்சியில் பார்த்ததிலிருந்து, அவர் பேட்டிங் செய்யும் விதம், அவரது மனநிலை, உழைப்பு இப்படி அனைத்தும் போற்றத்தக்கதாக உள்ளது.

- Advertisement 2-

அடுத்த சில ஆண்டுகளில் அவர் இந்திய அணியின் மிக முக்கியமான ஒரு வீரராக இருப்பார். அதே சமயம் அபினவ் மனோகர் குறித்து அவர் பேசுகையில், அபினவ் மனோகரிடம் இருக்கும் அபாரமான திறமையை நான் கடந்த வருடமே கவனித்தேன். இதே போல அவர் இன்னும் மூன்று ஆண்டுகள் விளையாடினாள் அவர் மிக சிறந்த ஒரு வீரராக வர வாய்ப்புண்டு.

இதையும் படிக்கலாமே: சிஎஸ்கே-விற்காக இதை எல்லாம் கூடவா செய்கிறார் தோனி? வெளிய தெரியாம பல வேலைகளை ரகசியமா இப்படி செய்வார் போல இருக்கே. தோனி குறித்து மேத்தியூ ஹைடன் சொன்ன அல்டிமேட்ட தகவல்

அவருடைய திறமை குறித்து எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இவ்வாறாக ரஷீத் கான் குஜராத் அணியின் வாராந்திர பாட்காஸ்டில் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. நாளை குஜராத் அணி, சென்னை அணியை பைனலில் எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடதக்கது.

சற்று முன்