- Advertisement 3-
Homeவிளையாட்டுஐபிஎல்-ல் விளையாடியதன் விளைவால் சொந்த நாட்டிற்காக விளையாட முடியாமல் போன ரஷித் கான் - அடடா...

ஐபிஎல்-ல் விளையாடியதன் விளைவால் சொந்த நாட்டிற்காக விளையாட முடியாமல் போன ரஷித் கான் – அடடா நல்ல பௌலர் ஆச்சே என வருந்தும் ரசிகர்கள்.

- Advertisement 1-

ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய ரஷீத் கானுக்கு இந்த சீசன் சிறப்பான ஒன்றாக அமைந்தது. மே 29 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான கடைசி பந்து த்ரில்லர் போட்டியில் டைட்டன்ஸ், தோல்வியடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்த நிலையில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் ஜூன் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி அம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூன் 4, ஞாயிற்றுக்கிழமை அதே மைதானத்தில் நடைபெறும். இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் முடிந்ததும், ஆப்கானிஸ்தான் வங்கதேசம் சென்று ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். மேட்ச் வின்னரான ரஷீத் கான் அடுத்து ஜூன் 7 ஆம் தேதி ஹம்பாந்தோட்டையில் நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கு அணிக்கு திரும்புவார் என்று சொல்லப்படுகிறது.

ரஷிதின் காயத்தால் முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான் மற்றும் இளம் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது ஆகிய மூவரும் சுழற்பந்து துறையில் கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ளனர். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரஷித்தின் காயம் குறித்து விளக்கமளித்துள்ளது.

- Advertisement 2-

அதில்  “அவர் முழு மருத்துவ கண்காணிப்பில் இருப்பார், மேலும் ஜூன் 7 ஆம் தேதி நடைபெறும் இறுதி ஒருநாள் போட்டிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது. பந்து வீச்சின் மூலம் ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் ரஷித் கான் என்பது பலரும் அறிந்ததே. இந்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள். அவர் விரைந்து நிலைபெற்று வரவேண்டும் என்று கூறிவருகின்றனர்.

இதையும் படிக்கலாமே: கோலியோட ஆட்டத்தை பார்த்து இவங்களுக்கு இப்போ நிச்சயம் பயம் இருக்கும். அவர் இப்போ இருக்கற பார்முக்கு தெறிக்கவிட போறாரு – முகமது கைஃப் கருத்து

24 வயதாகும் ரஷீத் கான் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுழல் தாக்குதலை முன்னின்று வழிநடத்தினார். அவர் 17 போட்டிகளில் 8.24 என்ற ரன்ரேட் விகிதத்தில் 27 விக்கெட்களை  கைப்பற்றினார். அவர் தனது சக வீரர் மோஹித் ஷர்மாவுடன் இணைந்து சீசனின் இரண்டாவது-அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற மைல்கல்லையும் எட்டினார்.

சற்று முன்