- Advertisement 3-
Homeவிளையாட்டுநாங்க ஜெயிக்க வேண்டிய மேட்ச்.. அந்த தப்பால தான் தோத்து போனோம் - ரஷீத் கான்...

நாங்க ஜெயிக்க வேண்டிய மேட்ச்.. அந்த தப்பால தான் தோத்து போனோம் – ரஷீத் கான் பேச்சு

- Advertisement 1-

ரஷீத் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி கடந்த சில ஐசிசி தொடர்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் மீண்டும் ஒருமுறை டி20 உலக கோப்பை தொடரிலும் அப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். லீக் சுற்றில் தங்கள் முதல் போட்டியிலேயே நியூசிலாந்து அணியை 75 ரன்களில் சுருட்டி அசர வைத்திருந்த ஆப்கானிஸ்தான் அணி, மற்ற இரண்டு சிறிய அணிகளையும் வீழ்த்தி இருந்தது.

இதனால் மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்றிருந்த அவர்கள் நேரடியாக சூப்பர் 8 சுற்றிற்கும் முன்னேற்றம் கண்டிருந்த நிலையில் தங்களின் கடைசி லீக் போட்டியில் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மட்டும் தோல்வி அடைந்திருந்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் அணியாக நூறு ரன்களை கடந்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 200 ரன்களுக்கு மேல் குவித்திருந்தது.

இந்த தோல்விக்கு பின்னர் நேரடியாக சூப்பர் 8 சுற்றில் காலடி எடுத்து வைத்திருந்த ஆப்கானிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக முதல் போட்டியில் களமிறங்கி இருந்தது. நிச்சயம் மிகப்பெரிய ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என்று தான் அனைவருமே எதிர்பார்த்தனர். ஆனால் முதலில் பந்துவீச்சில் கலக்கிய அவர்கள் சூர்யகுமார் மற்றும் ஹர்திக் விக்கெட்டை எடுக்க முடியாமல் திணறியதால் இந்திய அணி 181 ரன்களையும் குவித்திருந்தது.

இதன் பின்னர் இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில் பெரிய அளவில் ரன் சேர்க்க முடியாமல் போனதால் 134 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தனர். இதனால் இந்திய அணியும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றை தோல்வியுடன் தொடங்கி உள்ளது. மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளில் நிச்சயம் அவர்கள் நல்ல கம்பை கொடுப்பார்கள் என ரசிகர்கள் குறிப்பிட்டும் வருகின்றனர்.

- Advertisement 2-

இதனுடைய இந்த தோல்விக்கு பின் பேசியிருந்த ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான், “இந்தியாவின் பேட்டிங் முடிந்த பின்னர் இந்த மைதானத்தில் 170 முதல் 150 ரன்களை சேஸ் செய்துவிடலாம் என்று தான் நினைத்தோம். பெரிய அணிகளுக்கு எதிராக ஆடும் போது எப்படி அந்த இலக்கை எட்ட முடியும் என்பதை பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். எனது பந்துவீச்சு மிக சிறப்பாக வெளிப்பட்டு வருகிறது.

ஐபிஎல் போட்டிகளில் நான் தடுமாறிய நிலையில் இப்போது சரியான இடத்தில் தொடர்ச்சியாக பந்து வீசி வருகிறேன். ஆனால் போட்டியின் முடிவு என்பது தான் கடைசியில் மிக முக்கியம். கிரிக்கெட்டை நாங்கள் மிக ரசித்து ஆடினாலும் எங்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பதுதான் பார்க்கப்பட வேண்டிய ஒன்று. ஒவ்வொரு பிட்ச்சின் சூழலும் எங்களுக்கு உதவியாக இருந்தால் அதற்கு அடிப்படையில் பேட்டிங் மற்றும் பவுலிங் டிராக்கை நாங்கள் தீர்மானிப்போம்” என ரஷீத் கான் கூறியுள்ளார்.

சற்று முன்