- Advertisement 3-
Homeவிளையாட்டுஉ.கோ அணியில் அஸ்வின் இருப்பாரா மாட்டாரா? அவருடைய நிலை என்ன? ராகுல் டிராவிட் கூறிய தகவல்

உ.கோ அணியில் அஸ்வின் இருப்பாரா மாட்டாரா? அவருடைய நிலை என்ன? ராகுல் டிராவிட் கூறிய தகவல்

- Advertisement 1-

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது, ஆஃப் ஸ்பின்னர் இல்லையே என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஏனென்றால் இந்திய ஆடுகளங்களில் ஆஃப் ஸ்பின்னர்களால் ஆட்டத்தையே மொத்தமாக மாற்ற முடியும். இதன் காரணமாக இந்தியாவின் சிறந்த ஆஃப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஏன் இல்லை என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

ஆசிய கோப்பை தொடரில் அஸ்வின் இல்லாமல் களமிறங்கிய இந்திய அணி வெற்றிபெற்றது. அப்போது அக்சர் படேல் கையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அக்சர் படேல் இடத்திற்கு ஆஃப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தரை அழைத்து கொண்டார் ரோகித் சர்மா. இதனால் 3 ஸ்பின்னர்களும் 3 ரகங்களில் வீசுவார்கள் என்று சொல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதன் மூலமாக 21 மாதங்களுக்கு பின் மீண்டும் அஸ்வின் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார். இதன் காரணமாக உலகக்கோப்பை தொடருக்கும் அஸ்வின் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அஸ்வின் தேர்வு குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசும் போது, ரவிச்சந்திரன் அஸ்வின் போல் அனுபவம் வாய்ந்த ஒரு கிரிக்கெட் வீரர் இந்திய அணிக்கு திரும்பி இருப்பது மிகச்சிறந்த ஒன்றாகும். அஸ்வினால் அவரின் அனுபவத்தில் இருந்து செயல்பட முடியும். அதேபோல் நம்பர் 8ல் களமிறங்கி சிறந்த பேட்டிங்கையும் வெளிப்படுத்த முடியும்.

- Advertisement 2-

யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டால் அஸ்வினை அணிக்குள் கொண்டு வருவது பற்றி ஏற்கனவே ஆலோசித்திருக்கிறோம். எங்களின் திட்டங்களில் அஸ்வின் எப்போதும் இருந்திருக்கிறார். அவர் கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட் விளையாடவில்லை என்பது நன்றாக தெரியும். ஆனால் அதனை அஸ்வினால் அனுபவம் மூலமாக சரிசெய்ய முடியும் என்று தெரிவித்தார்.

ஆசிய கோப்பை முடிவடைந்த பின் ரவிச்சந்திரன் அஸ்வினிடம் தான் தொடர்ந்து பேசி வருவதாக கேப்டன் ரோகித் சர்மா கூறி இருந்தார். அவர் கூறிய அடுத்த நாளிலேயே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினின் பெயர் இருந்தது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

சற்று முன்