- Advertisement -

ரெட் கார்டு கொடுங்க.. குல்பதீனை சீண்டிய அஸ்வின்.. பதிலுக்கு ஆப்கானிஸ்தான் வீரர் சொன்ன பதில் தான் அல்டிமேட்..

பங்களாதேஷ் அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் தற்போது ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளதை பற்றி தான் தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் பேசி வருகின்றது. இந்த முறை டி20 உலக கோப்பைத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் இடம் பிடித்திருந்த பிரிவிலும் ஆப்கானிஸ்தான் அணி இடம் பிடித்திருந்தது. இரண்டு பெரிய அணிகளுக்கு மத்தியில் அவர்கள் இருந்ததால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவார்களா என்ற கேள்வி தான் அதிகமாக இருந்தது.

ஆனால் நியூசிலாந்து அணியை 75 ரன்களில் சுருட்டி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்திருந்த ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றிற்கு முன்னேற்றம் கண்டிருந்தது. அங்கே லீக் சுற்றுகளை போல இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளுடன் ஒரே பிரிவில் இடம்பெற்றிருந்தது ஆப்கானிஸ்தான் அணி.

- Advertisement -

இதனால், அவர்கள் அரையிறுதி முன்னேறுவது என்பது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியதை விட சவாலாக இருக்க, இந்திய அணிக்கு எதிராக முதல் போட்டியில் தோல்வி அடைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியை முதல் முறையாக வீழ்த்தி அனைவரையும் மிரள வைத்திருந்த ஆப்கானிஸ்தான், தங்களின் கடைசி சூப்பர் 8 போட்டியில் வங்காளதேச அணியை வீழ்த்தி இந்தியாவுக்கு அடுத்தபடியாக அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் பயணத்திலேயே மிக முக்கியமான ஒரு முன்னேற்றமாக இது பார்க்கப்படும் நிலையில், அவர்களின் ஒட்டுமொத்த நாடே ஏதோ ஐசிசி கோப்பையை வென்ற அளவுக்கு பொது இடங்களில் கூடி இதனை கொண்டாடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்க அணியையும் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி போட்டியில் சந்திக்க உள்ளது.

- Advertisement -

இதற்கு மத்தியில், வங்காளதேச அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மோதிய போது மழை அடிக்கடி பெய்து கொண்டே இருந்தது. அப்போது ஒரு முறை மழை வந்து மீண்டும் போட்டி ஆரம்பமான போது, டிஎல்எஸ் முறைப்படி, ஆப்கானிஸ்தான் அணி முன்னிலையில் இருந்தது.

இதனால், மீண்டும் ஒரு மழை பெய்தால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று விடலாம் என்ற சூழலில், பயிற்சியாளர் அறிவுறுத்தலின் பெயரில் ஸ்லிப்பில் நின்ற குல்பதீன், திடீரென காயத்தால் அவதிப்படுவது போல கீழே விழுந்து நாடகமாடினார். நேரத்தை அதிகரிக்க இந்த தில்லாலங்கடி வேலையில் அவர் ஈடுபட, வர்ணனையில் இருந்தவர்கள் தொடங்கி அனைவருமே இதனை பற்றி தான் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு மத்தியில் வலியால் துடித்த அவர், ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதும் வேகமாக மைதானத்தை சுற்றி ஓடியதும் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அந்த வகையில் இந்திய அணி வீரரான ரவி அஸ்வினும், குல்பதீனுக்கு ரெட் கார்டு கொடுங்கள் என தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை கவனித்த குல்பதீன், “அது சந்தோசமாக இருக்கும் போதும், சோகத்துடன் இருக்கும் போதும் சில நேரம் நடைபெறும்” என காயத்தை வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.

இது விளையாட்டாக தெரிந்தாலும் ஏமாற்று வேலையில் ஈடுபட்ட குல்பதீன் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

- Advertisement -

Recent Posts