- Advertisement -
Homeவிளையாட்டுஉலககோப்பைல ரோகித் சர்மாவும் சுப்மேன் கில்லும் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டாங்க. ஆதாரங்களோடு புட்டு புட்டு வைத்த...

உலககோப்பைல ரோகித் சர்மாவும் சுப்மேன் கில்லும் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டாங்க. ஆதாரங்களோடு புட்டு புட்டு வைத்த ரவி சாஸ்திரி

- Advertisement-

உலகின் தலை சிறந்த அணி என்று பலராலும் கூறப்படும் இந்திய அணி இந்த உலககோப்பைக்கு தயாராகி வருகிறது. இந்த உலகக்கோப்பையை பொறுத்தவரை வரை இந்திய அணிக்கு ஏகப்பட்ட பொறுப்புகளும் அதே சமயம் அணி குறித்த ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும் உள்ளன என்றே கூறலாம். இந்த நிலையில் இந்திய அணி குறித்த சில கருத்துக்களை தற்போது ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

2011 உலகக்கோப்பை அணியோடு ஒப்பிடுகையில் தற்போது உள்ள அணியில் சில வித்தியாசங்களை ரவி சாஸ்திரி கண்டறிந்துள்ளார். 2011 உலகக்கோப்பை அணியானது தோனி தலைமையில் விளையாடி இந்தியாவிற்கு வெற்றியை பெற்று தந்ததை நாம் அறிவோம். அதோடு ஒப்பிடுகையில் தற்போது உள்ள அணியின் பேட்டிங் அடரில் சில மாறுதல்களை ரவி சாஸ்திரி கூறி உள்ளார்.

கே.எல் ராகுல் அணியில் இல்லாதா காரணத்தால் தற்போது ரோகித் சர்மா மற்றும் சுப்மேன் கில் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் துவக்க ஜோடியாக உள்ளனர். ஆனாலும் இதில் இருவருமே இடது கை பேட்ஸ்மேன் இல்லை என்பதால் இந்த ஜோடியானது உலகக் கோப்பைக்கான சிறந்த காம்பினேஷனாக இருக்காது என்று ரவி சாஸ்திரி சில தரவுகளோடு கூறி உள்ளார். இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு,

“நிச்சயம் இந்த உலகக்கோப்பை போட்டிகள் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். நாம் இதில் சிலவற்றை உற்று நோக்கவேண்டும். வீரர்களின் பார்ம் என்பது இங்கு மிக முக்கியம். அணியில் ஒரு சமநிலை இருப்பது மிக முக்கியம். இடது கை ஆட்டக்காரர்கள் முதல் மூன்று அல்லது நான்கு இடங்களில் கண்டிப்பாக இருக்க வேண்டும். முதல் 6 இடத்தில் இரண்டு இடது கை வீரர்கள் இருந்தால் அது சிறப்பாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

- Advertisement-

நாம் சற்று பின்னோக்கி பார்த்தால், 2011-இல் கம்பீர், யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் இருந்தார்கள். அதே போல 1974-இல் பார்த்தால் கல்லிச்சரன், பிரெட்ரிக்ஸ், கிளைவ் லாயிட் ஆகியோர் இருந்தார்கள். 1979திலும் அப்படி தான். ஆனால் 1983-இல் மட்டும் இடது கை ஆட்டக்காரர்கள் பெரிதாக யாரும் இல்லை. ஆனால் அந்த முழு போட்டியும் சற்றும் வித்தியாசமானது.

1987-இல் ஆஸ்திரேலிய அணியில் தேவையான அளவு இடது கை ஆட்டக்காரர்கள் இருந்தார்கள். 1996-இல் இலங்கை அணியிலும் அப்படி தான். சனத் ஜெயசூர்யா, அர்ஜுன ரணதுங்க மற்றும் குருசின்ஹ போன்றோர்கள் இருந்தார்கள். தற்போது இங்கிலாந்து அணியிலும் அப்படி உள்ளார்கள். இப்படி அணியில் அந்த கலவையும் சமநிலையும் உருவாக்கப்பட வேண்டும். ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் துவக்க வீரர்களாக களம் இறங்குவது சரியாக இருக்காது என்று நீண்ட விளக்கத்தை கொடுத்துளளார் ரவி சாஸ்திரி.

அவரின் இந்த கருத்தை சற்று உற்று நோக்கினால், ஏற்கனவே ஓப்பனிங்கில் இறங்கிய கே எல் ராகுல் போன்ற ஒரு இடது கை வீரர் ஓப்பனிங்கில் இருக்க வேண்டும் என்பதும், அதே சமயம் ரிஷப் பண்ட் போன்ற ஒருவரும் அணியில் டாப் 6இல் இருப்பது அவசியம் என்பதும் தெளிவாக தெரிகிறது.

சற்று முன்