- Advertisement -
Homeவிளையாட்டுரோகித்தும் கோலியும் அவர்களாகவே இதில் இருந்து விலகிக்கொள்வது நல்லது. இல்லை என்றால் கஷ்டம் தான். ரவி...

ரோகித்தும் கோலியும் அவர்களாகவே இதில் இருந்து விலகிக்கொள்வது நல்லது. இல்லை என்றால் கஷ்டம் தான். ரவி சாஸ்திரி தடாலடி கருத்து!

- Advertisement-

ஐபிஎல் தொடரின் மூலம் பல திறமையான இளம் வீரர்கள் இந்திய அணிக்குக் கிடைத்து வருகின்றனர். இந்த சீசனில் கூட யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடி கவனத்தைப் பெற்று வருகின்றனர். அவர்களுக்கு விரைவில் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்திய டி20 அணியில் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் கோலி ஆகியோர் விலகிக் கொள்ள வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இது சம்மந்தமாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தளத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் “2007 ஆம் ஆண்டு டி 20 உலகக்கோப்பைக்கு முன்னர் சச்சின், ராகுல் டிராவிட், கங்குலி ஆகியோர் இருந்த இடத்தில் இப்போது விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் உள்ளனர்.

விராட் மற்றும் ரோஹித் தங்களை டி20 யில் இருந்து விலக்கிக் கொள்ளவில்லை என்றால், பின்னர் அவர்களின் ஃபார்ம் பொறுத்துதான் தேர்வு நடக்கும். அணிக்கு நீங்கள் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுப்பீர்கள். அப்போது நிச்சயமாக அனுபவமும் கணக்கிடப்படும், உடற்தகுதி கணக்கிடப்படும்.

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் தங்களை நிரூபித்தவர்கள். அவர்கள் யாரென்று அனைவருக்கும் தெரியும். நான் இப்போது இளம் வீரர்களை அணிக்குள் கொண்டுவரச் செய்யும் திசையில் பயணிப்பேன். அதனால் இளம் வீரர்கள் வாய்ப்புகளையும், அதை வெளிப்படுத்தும் களத்தையும் பெறுவார்கள்.

- Advertisement-

அதே நேரத்தில் நீங்கள் விராட் மற்றும் ரோஹித் போன்றவர்களை ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வைத்துக் கொள்ளவேண்டும். தன்னம்பிக்கையோடும் பொறுப்பெடுத்துக் கொண்டும் விளையாடும் விதத்தில் இளைஞர்கள் இந்திய அணியின் கதவுகளை திறப்பார்கள் என நினைக்கிறேன். ஐபிஎல் முடிந்து வரும் முதல் டி 20 தொடரிலேயே இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் நடந்த டி 20 உலகக்கோப்பை தொடருக்கு பின்பு இந்திய டி 20 அணியில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்