- Advertisement -
Homeவிளையாட்டுபும்ராவின் வாழ்க்கையையே மாற்றிய அந்த போன் கால்.. நம்பர் 1 வீரர் ஆனதுக்கு பின்னாடி இப்டி...

பும்ராவின் வாழ்க்கையையே மாற்றிய அந்த போன் கால்.. நம்பர் 1 வீரர் ஆனதுக்கு பின்னாடி இப்டி ஒரு கதையா..

- Advertisement-

இந்திய அணியில் மட்டுமில்லாமல், சர்வதேச கிரிக்கெட் அரங்கிலும் நம்பர் 1 பந்து வீச்சாளராக இருப்பவர் தான் ஜஸ்பிரிட் பும்ரா. இவர் ஒரு சில போட்டிகளில் சிறப்பாக ஆடாமல் போனதால் சற்று விமர்சனங்களை சந்தித்திருந்தார். அதே போல காயத்தினால் சில தொடர்களை அவர் தவற விட்டிருந்தாலும் பின்னர் மீண்டும் அணியில் தொடர்ந்து ஆடி வரும் பும்ரா, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பட்டையை கிளப்பி வருகிறார்.

சுழலுக்கு சாதகமாக இருக்கும் இந்திய மைதானங்களில் கூட, தனது யார்க்கர் பந்துகளால் அசரடித்து வரும் பும்ரா, இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 வது டெஸ்டில் 9 விக்கெட்டுகள் எடுத்து இந்திய அணியை வெற்றி பெற வைத்ததுடன் ஆட்ட நாயகன் விருதினையும் வென்றிருந்தார். இதன் காரணமாக, டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேறினார் ஜஸ்பிரிட் பும்ரா.

- Advertisement -

இதன் மூலம், டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பையம் பெற்றிருந்தார். அது மட்டுமில்லாமல், டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடத்திற்கு வந்த ஓரே பந்து வீச்சாளர் என்ற பெருமையும் தற்போது பும்ராவிடம் உள்ளது.

இப்படி பல சாதனைகளுடன் வலம் வரும் பும்ரா, இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடர் மற்றும் டி 20 உலக கோப்பைத் தொடர்களில் தனது பந்து வீச்சால் எதிரணி வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

- Advertisement-

இந்த நிலையில், டெஸ்ட் போட்டியியல் தொடர்ந்து அற்புதமாக பந்து வீசி வரும் பும்ராவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்தது பற்றி இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி இருந்தார் பும்ரா.

அதற்கு முன்பு வரை பும்ரா என்றாலே ஒரு நாள் மற்றும் டி 20 என குறைந்த ஓவர் போட்டிகளில் தான் சரியானவராக இருப்பார் என்ற கருத்து பரவலாக இருந்தது. அப்படி ஒரு சமயத்தில் பும்ராவிற்கு போன் செய்து பேசியது பற்றி தற்போது பேட்டியளித்துள்ள ரவி சாஸ்திரி, “நான் பும்ராவிற்கு போனில் அழைத்து டெஸ்ட் போட்டிகளில் ஆட விருப்பம் இருக்கிறதா என சும்மா கேட்டேன். அப்படி வாய்ப்பு கிடைத்தால் அவரின் வாழ்வில் மிக முக்கியமான நாளாக இருக்கும் என தெரிவித்தார்.

அவர் வெள்ளை பந்து வீரர் என்றே முத்திரை குத்தப்பட்டு விட்டது. ஆனால் எனக்கு தெரியும் அவருடைய டெஸ்ட் கிரிக்கெட் பசி எப்படிப்பட்டது என்பது தெரிய வேண்டும் என நினைத்தேன். நான் அவரிடம் தயாராக இருக்க வேண்டும் என்றும், தெ. ஆ தொடரில் ஆட வைக்க போவதாகவும் கூறினேன். அவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட ஆர்வமாக இருந்தார்.

அதிலும் விராட் கோலியுடன் இணைந்து ஆடுவதிலும் பும்ராவிற்கு விருப்பம் இருந்தது. வெள்ளை பந்து போட்டிகளை விட டெஸ்ட் போட்டிகளில் உங்கள் சராசரி என்ன என்பதை தான் அனைவருமே நினைவில் வைத்திருப்பார்கள்” என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

சற்று முன்