- Advertisement -
Homeகிரிக்கெட்ஆஸ்திரேலியா மேட்ச்னாலே கோலி இந்த மாதிரி கொஞ்சம் வித்யாசமா தான் இருப்பாரு. இது மட்டும் நடந்தா...

ஆஸ்திரேலியா மேட்ச்னாலே கோலி இந்த மாதிரி கொஞ்சம் வித்யாசமா தான் இருப்பாரு. இது மட்டும் நடந்தா வேடிக்கை கன்பார்ம் – ரவி சாஸ்திரி பேச்சு

-Advertisement-

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதமான சாதனைகளுடன் சென்று கொண்டிருக்கிறார். இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடியுள்ள விராட் கோலி 48.26 என்கிற சராசரியுடன் 1979 ரன்களை குவித்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியிலும் இந்திய அணியின் மிக முக்கியமான வீரராக விராட் கோலி செயல்படுவார் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி என்றாலே கோலி வித்யாசமாக எழுந்திருப்பார். அவர் காபியை மிகவும் முன்னதாகவே வாசனை செய்வார் (பார்முக்கு சீக்கிரம் வருவார் என்ற அர்த்தத்தில் கூறி உள்ளார்). அவர் பவுலர்களை எதிர்கொள்ள ஆரம்பித்தால் நிச்சயம் அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பது உறுதி.

ஒரு 20 ரன்களை அவர் கடந்து விட்டால் நிச்சயம் நமக்கு பேட்டிங்கில் நல்லதொரு வேடிக்கையை காட்டுவார் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு சதம் அடிக்காமல் தவித்து வந்த அவர் 1205 நாட்களுக்குப் பிறகு தனது 28-வது டெஸ்ட் சதத்தை பார்டர் கவாஸ்கர் தொடரின் போது பதிவு செய்தார்.

அதோடு ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டி என அடுத்தடுத்த சதங்களை விளாசிய விராட் கோலி ஐபிஎல் தொடரிலும் சதம் அடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் எதிர்வரும் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் அவர் இந்த போட்டியிலும் அசத்த வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் உள்ளது.

-Advertisement-

மேலும் ரவி சாஸ்திரி கூறுகையில் : இந்த மைதானத்தின் சூழ்நிலைகள் சற்று சவாலானதாக தான் இருக்கும். பேட்ஸ்மேன்கள் இந்த பிளாட்டான விக்கெட்டில் கொஞ்சம் ஜாக்கிரதையாக விளையாட வேண்டும். நாம் சற்று கவனத்துடன் நல்ல துவக்கத்தை பெற்று விட்டால் நிச்சயம் இந்த மைதானத்தில் ரன்களை குவிக்க முடியும்.

இதையும் படிக்கலாமே: உலக டெஸ்ட் பைனலில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்? வெற்றி யாருக்கு சாதகமாக அமையும் தெரியுமா?

அதிலும் குறிப்பாக விராட் கோலி போன்ற வீரர்களுக்கு இந்த மைதானத்தின் கண்டிஷனை சீக்கிரமாக அறிந்து அதற்கு ஏற்றார் போல் மாற்றும் திறன் இருக்கிறது என்றும் ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்