- Advertisement 3-
Homeவிளையாட்டுவேணாம், நான் பேசுனா பிரச்சனை தான்.. இந்திய அணியில் நடந்த விரிசல்.. மௌனம் கலைத்த அஸ்வின்

வேணாம், நான் பேசுனா பிரச்சனை தான்.. இந்திய அணியில் நடந்த விரிசல்.. மௌனம் கலைத்த அஸ்வின்

- Advertisement 1-

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் மிக முக்கியமான வீரராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், வரும் ஏழாம் தேதி நூறாவது டெஸ்ட் போட்டியில் காலடி எடுத்து வைக்க உள்ளார். இந்த டெஸ்ட் போட்டி ஆரம்பிக்க இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவருமே அஸ்வினுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

500 விக்கெட்டுகளை சமீபத்தில் எட்டியிருந்த அஸ்வின், இன்னும் பல சாதனைகளை டெஸ்ட் போட்டியில் படைக்க வேண்டும் என்பதும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே பலரும் தொட முடியாத உயரத்தில் சாதனையை எட்ட வேண்டும் என்பதும் தான் அனைவரின் விருப்பமாக உள்ளது. ஆனால் அஸ்வினுக்கு இந்த உயரம் மிக எளிதில் கிடைத்துவிடவில்லை.

பல தொடர்களில் அணியில் இடம் பெற்றிருந்த போதும் ஆடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டிருந்தார். குல்தீப் மற்றும் சாஹல் ஆகியோர் தொடர்ந்து ஆடிய போது, அணியில் கூட இடம் கிடைக்காமல் அவதிப்பட்டார் அஸ்வின்.

அதையெல்லாம் தாண்டி மீண்டும் கம்பேக் கொடுத்து இன்று தொடர்ந்து இந்திய அணிக்காக ஆடிவரும் ரவிச்சந்திரன் அஸ்வினிடம், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவனான அணில் கும்ப்ளே, உங்களது நூறாவது டெஸ்ட் முன்னாடியே வந்திருக்க வேண்டும் என்றும், வெளிநாடுகளில் நீங்கள் ஆடிய போது நிறைய போட்டிகளில் ஆடவில்லை என்றும் குறிப்பிட்டார்.

- Advertisement 2-

அதுமட்டுமில்லாமல் அந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காததை எப்படி உணர்கிறீர்கள் என்றும் கேள்வி கேட்டார். இதற்கு சற்று கலக்கத்துடன் பதில் சொன்ன ரவிச்சந்திரன் அஸ்வின், “நான் சர்ச்சையாக எதையும் பேச விரும்பவில்லை. எப்போதுமே பேட்ஸ்மேன்களுக்கு அடுத்த இடத்தில் தான் பவுலர்கள் இருக்கின்றனர். பவுலர்கள் ஏதாவது ஒரு தவறு செய்தால் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காது. எனக்கும் அதே போல தான்.

பல ஒருமுறை தோற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க, ஒரு முறை நான் தோற்றாலும் கூட எனக்கு அதன் பின்னர் வாய்ப்புகள் சரியாக கிடைக்கவில்லை. நான் இது பற்றி பலமுறை ஆலோசனை செய்து இருக்கிறேன். ஆனால் அணி வெற்றி பெற வேண்டும் என்பதே எனக்கு முக்கியம். நான் ஆடாமல் இருந்தாலும் இந்திய அணி வெற்றி பெறும்போது அதை அதிகமாக கொண்டாடுவது நான் தான்.

என்னுடைய சிறுவயதில் இந்திய ஜெர்சியை போட்டுக் கொள்ள வேண்டும் என விரும்பினேன். அதனால் இன்று நான் இருக்கும் நிலையை எண்ணி அணியை விட என்னை சுயநலமாக நான் முன்னிலைப்படுத்தி காட்ட மாட்டேன். நான் ஏமாற்றமான நாட்களை சந்தித்தது உண்மைதான். ஆனால் அதிலிருந்து எப்படி வெளியே வரவேண்டும் என்பதை கற்றுக் கொண்டுள்ளேன். அதுமட்டுமில்லாமல் சில சிறந்த கிரிக்கெட் வீரர்களுடன் நான் ஆடியதையும் பெருமையாக கருதுகிறேன்” என அணில் கும்ப்ளேவிடம் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

சற்று முன்