- Advertisement -
Homeவிளையாட்டுரோஹித் என்ன சொன்னாரோ.. அத கொஞ்சம் கூட பிசிறு இல்லாம செஞ்சு முடிச்சோம்.. வெற்றி ரகசியம்...

ரோஹித் என்ன சொன்னாரோ.. அத கொஞ்சம் கூட பிசிறு இல்லாம செஞ்சு முடிச்சோம்.. வெற்றி ரகசியம் இதான்.. அஸ்வின் பேட்டி

- Advertisement-

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரராக இருந்து வருபவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் இல்லாமல் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் அரிதாகவே ஆடிவரும் சூழலில் எந்த மைதானத்தில் போட்டி நடந்தாலும் தன் பக்கம் அதனை திருப்பும் திறன் அஸ்வினின் சுழற்பந்து வீச்சில் உள்ளது. சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிராக நடந்து முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அஸ்வினின் ட்டம் அதிக பாராட்டுகளை பெற்றிருந்தது.

முதல் டெஸ்டில் இந்திய அணி ரன் சேர்க்கவே தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த போது தனது சதத்தால் இந்திய அணியை நிமிர வைத்ததுடன் மட்டுமில்லாமல் இந்திய அணியின் வெற்றியையும் எளிதாக மாற்றி இருந்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். முதல் இன்னிங்சில் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் இரண்டாவது இன்னிங்சில் இலக்கை நோக்கி ஆடிய வங்கதேச ஆணியே பெட்டி பாம்பாக சுருட்டிய அவர் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

- Advertisement -

இரண்டாவது டெஸ்டில் பேட்டிங் செய்து ஆட்டத்தை நிரூபிக்க அஸ்வினுக்கு சிறிய வாய்ப்பு கிடைத்திருந்தாலும் பந்து வீச்சில் கலக்கி இருந்தார். இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின், இந்த டெஸ்ட் தொடரில் 11 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் ஒரு சதத்தையும் அடித்திருந்தார். இதன் மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்த அவருக்கு தொடர் நாயகன் விருதும் கிடைத்திருந்தது.

இதன் பின்னர் தொடர் நாயகன் விருது வென்ற கையுடன் பேசி இருந்த அஸ்வின், “அணியின் வெற்றிக்காக எனது ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்ததில் பெருமிதம் கொள்கிறேன். இந்த வெற்றி என்பது எங்களுக்கு மிக முக்கியம். நிறைய பந்து வீச்சாளர்கள் எங்களுக்காக நல்ல பங்களிப்பை மேற்கொண்டிருந்தனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இருக்கும் சூழலில் இது எங்களுக்கு மகத்தான வெற்றி.

- Advertisement-

வங்கதேச அணியை முதல் இன்னிங்சில் நாங்கள் ஆல் அவுட் செய்த போது அவர்களுக்கு அடுத்த இன்னிங்சில் பந்து வீச 80 ஓவர்கள் வேண்டுமென கூறி இருந்தார். அதே போல, 230 ரன்களுக்கு நாம் அவுட்டானாலும் பரவாயில்லை. வேகமாக அடிக்கும்படி கூறினார். அவர் சொன்னது போல முதல் பந்தில் சிக்ஸ் அடித்து அடித்தளத்தை அமைத்து கொடுத்தார்.

இப்படி ஒரு பந்து வீச்சு அட்டாக் உள்ள அணியில் ஒரு பவுலராக இருப்பது பெருமையாக உள்ளது. பும்ரா, ஆகாஷ் தீப், சிராஜ் என அனைவருமே சிறப்பாக செயல்பட்டிருந்தனர். இதில் ஜடேஜாவை பற்றி நாம் நிறைய பேச வேண்டுமென்ற தேவையே இல்லை. கான்பூர் மைதானத்தில் இருக்கும் மண்ணை போல இந்தியாவில் இருக்கும் நிறைய மைதானங்களில் ஆடி உள்ளோம்.

கேரம் பந்துகளை குறைந்த ஓவர் போட்டிகளில் பயன்படுத்துவது போல நான் டெஸ்ட் பேட்டில் பயன்படுத்துவதில்லை. எனது பந்து வீச்சில் நிறைய வேரியேஷன்களை கொண்டு வந்து தாக்கத்தை ஏற்டுத்தி இருந்ததும், பல சுழற்பந்து வீச்சாளர்களை போல ஒரு ரிதம் செட் செய்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது” என அஸ்வின் கூறி உள்ளார்.

சற்று முன்