- Advertisement 3-
Homeவிளையாட்டுஇளம் வீரர் குல்தீப்பிற்காக அஸ்வின் கொடுத்த கவுரவம்.. 100 வது டெஸ்டில் நடந்த ஹைலைட்டான சம்பவம்..

இளம் வீரர் குல்தீப்பிற்காக அஸ்வின் கொடுத்த கவுரவம்.. 100 வது டெஸ்டில் நடந்த ஹைலைட்டான சம்பவம்..

- Advertisement 1-

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவுக்கு வந்திருந்த நிலையில் அதிலும் இந்திய அணியின் கை தான் அதிகமாக ஓங்கி உள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்ய அவர்கள் சிறப்பானதொரு தொடக்கத்தை தான் கண்டிருந்தனர்.

உணவு இடைவேளைக்கு முன்பாக 100 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகள் என இங்கிலாந்து அணி இருந்தது. ஆனால், அதன் பின்னர் குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோரின் சுழலில் சிக்கிய இங்கிலாந்து அணி சின்னாபின்னமானது. அந்த அணியின் தொடக்க வீர்ர சாக் கிரவுலி 79 ரன்கள் எடுத்து அவுட் ஆகி இருந்தார். ஆனால் மற்ற வீரர்கள் யாருமே 30 ரன்களைக் கூட தொடவில்லை. இதன் காரணமாக, அந்த அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஒரு கட்டத்தில் 175 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த இங்கிலாந்து அணி, மேற்கொண்டு 8 ரன்கள் எடுப்பதற்குள் முக்கியமான ஐந்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதவித்தது. இதனால் 218 ரன்களுக்கும் அவர்கள் ஆல் அவுட்டாகினர்.

இங்கிலாந்தின் முதல் நான்கு விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் எடுத்திருந்த நிலையில், அவர் மொத்தம் ஐந்து விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இதே போல போட்டியின் பாதிக்குப் பின்னர் விக்கெட்டுகளை அள்ள தொடங்கிய அஸ்வின், தனது நூறாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

- Advertisement 2-

இதனைத் தொடர்ந்து தங்களின் முதல் நாளிலேயே முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, அபாரமாக ஆடியுள்ளது. 30 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 57 ரன்களில் அவுட்டாக, ரோஹித் சர்மா 52 ரன்களுடனும், கில் 26 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

இதனால் கடைசி டெஸ்டில் இந்திய அணி வென்று தொடரை முடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் சூழலில் இந்த போட்டியில் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ இடையே நடந்த ஒரு சம்பவம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இங்கிலாந்தின் பேட்டிங் முடிந்ததுமே மைதானத்தில் இருந்து இந்திய வீரர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். பொதுவாக 5 விக்கெட்டுகளை ஒருவர் எடுத்தால் அவர் வெளியே வரும்போது பந்தை மேலே தூக்கி காட்டிக்கொண்டு வரவேண்டும்.

ஆனால் இந்த போட்டியில் 5 விக்கெட் எடுத்த குல்தீப் யாதவ், 100-வது டெஸ்டில் நான்கு விக்கெட்டுகள் எடுத்த சீனியர் வீரர் அஸ்வினுக்கு மரியாதை நிமித்தமாக பந்தை கொண்டு செல்லும் படி அறிவுறுத்தினார். ஆனால் அஸ்வினோ, மீண்டும் குல்தீப் யாதவிடம் பந்தை வீசி நீயே முன்பு நடந்து செல் என்றும் அறிவுறுத்தினார். அதன் பின்னர் தான் குல்தீப் யாதவ் பந்தை எடுத்துக்கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறி இருந்தார்.

சீனியர் வீரருக்காக குல்தீப் கொடுத்த மரியாதையும் பின்னர் 5 விக்கெட்டுகள் எடுத்த இளம் வீரர் என்ற தொனியில் அஸ்வின் வழிநடத்திய விதமும் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

சற்று முன்