- Advertisement 3-
Homeவிளையாட்டுமுரளிதரன், வார்னேவாலயே முடியலயே.. டெஸ்டில் புதிய அத்தியாயம் எழுதிய ரவிச்சந்திரன் அஸ்வின்..

முரளிதரன், வார்னேவாலயே முடியலயே.. டெஸ்டில் புதிய அத்தியாயம் எழுதிய ரவிச்சந்திரன் அஸ்வின்..

- Advertisement 1-

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் இடையான டெஸ்ட் தொடருக்கு மத்தியில், இந்த தொடர் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு சோதனையும், சாதனையும் நிறைந்த தொடராக தான் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நான்கு விக்கெட்டுகளை அஸ்வின் எடுத்து விட்டால் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்து வீச்சாளர் என்ற சிறப்பை பெற்று விடலாம் என நிலை இருந்தது.

ஆனால் அந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் விக்கெட்டே எடுக்காத அஸ்வின், இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகள் எடுத்திருந்தார். இதன் பெயரில் அந்த 500 என்ற ஒரே ஒரு விக்கெட்டிற்காக இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி காத்திருக்க வேண்டிய நிலையும் உருவானது. அதன்படி மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்தின் முதல் விக்கெட்டையே அஸ்வின் சாய்த்து அணில் கும்ப்ளேவிற்கு பிறகு 500 விக்கெட்டுகளை தொட்ட இந்திய பந்து வீச்சாளர் என்ற மிக மகத்தான சாதனைக்கும் உரித்தானவரானார்.

அது மட்டுமில்லாமல், முத்தையா முரளிதரனுக்கு பிறகு 500 விக்கெட்டுகளை அதிவேகமாக எடுத்த பந்து வீச்சாளர் என்ற சிறப்பும் அஸ்வின் பக்கம் சேர்ந்தது. இதற்கு மத்தியில் தான் யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் அரங்கேறி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதாவது அஸ்வினின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதாகவும் இதனால் மூன்றாவது போட்டியின் பாதியிலேயே அவர் விலகிச் செல்வதாகவும் பிசிசிஐ அறிவித்திருந்தது.

அதன்படி இரண்டாவது நாளின் பாதியில் கிளம்பி சென்ற அஸ்வின், நான்காவது நாள் பாதியில் அணியில் இணைந்திருந்தார். அதிலும் டாம் ஹார்ட்லி விக்கெட்டை எடுத்து அனைவரையும் கவனிக்க வைத்திருந்தார் அஸ்வின். ஒரு பக்கம் சோதனைகள் நிறைந்து இருந்தாலும், இன்னொரு பக்கம் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைகளையும் படைத்து வருகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். அதிலும் தாயின் மருத்துவ அவசரத்துக்காக சென்றதுடன் அதே போட்டியில் மீண்டும் இணைந்த அஸ்வினின் அர்ப்பணிப்பையும் பலர் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement 2-

இந்த நிலையில், கடந்த 143 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த பந்து வீச்சாளரும் செய்யாத மிக முக்கியமான ஒரு சாதனையை படைத்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வினுக்கு முன்பாக அணில் கும்ப்ளே, முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே உள்ளிட்ட பலரும் அதிக விக்கெட்டை எடுத்திருந்தாலும் எந்த பந்துவீச்சாளரும் இடது கை பேட்ஸ்மேனை 250 முறை விக்கெட் எடுத்ததில்லை.

அப்படி இருக்கையில் இரண்டாவது இன்னிங்சில் டாம் ஹார்ட்லி விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் க்ரிக்கெட் வரலாற்றிலேயே 250 முறை இடதுகை பேட்ஸ்மேன்களை அவுட் எடுத்த முதல் பந்து வீச்சாளர் என வரலாற்று சிறப்பை அஸ்வின் படைத்து டெஸ்ட் சரித்திரத்திலும் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளார்.

சற்று முன்