- Advertisement -
Homeவிளையாட்டுசிஎஸ்கே பந்து வீச்சாளரால் கூட முடியல.. முதல் ஆளாக சேப்பாக்கத்தில் சம்பவம் செஞ்ச ரவிச்சந்திரன் அஸ்வின்..

சிஎஸ்கே பந்து வீச்சாளரால் கூட முடியல.. முதல் ஆளாக சேப்பாக்கத்தில் சம்பவம் செஞ்ச ரவிச்சந்திரன் அஸ்வின்..

- Advertisement-

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் சமீபத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் மோதி இருந்த போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றிருந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானம் என வந்து விட்டாலே எப்போதும் சுழற்பந்து வீச்சிற்கு அதிக சாதகங்கள் இருக்கும் ஸ்லோ பிட்ச்சாக தான் அமைந்திருக்கும்.

அதே தான் இந்த போட்டியில் மீண்டும் ஒருமுறை மெய்யாகி உள்ளது. அது மட்டுமில்லாமல், இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆடியிருந்த சிஎஸ்கே, அதில் ஐந்தில் வெற்றி பெற்றும் அசத்தி உள்ளது.

ராஜஸ்தான் அணிக்கு எதிராகவும் சிஎஸ்கே அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசி இருந்ததால் அவர்களால் 20 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் பலமாக திகழும் ராஜஸ்தான் அணி பல போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் குறையாமல் அடித்து வந்த நிலையில் இந்த முறை 141 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர்.

இதற்கு மிக முக்கிய காரணமாக சென்னை அணியின் பந்து வீச்சாளர் சிமர்ஜீத் சிங் அமைந்திருந்தார். பட்லர், ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் என ராஜஸ்தான் அணியின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி பெரிய குடைச்சலையும் அந்த அணிக்கு கொடுத்திருந்தார்.

- Advertisement-

தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே நடுவே சில விக்கெட்டுகளை இழந்தாலும் நிதானமாக ஆடி ரன் சேர்த்து 19 வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டிப் பிடித்திருந்தது. இந்த வெற்றியால் பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ள சென்னை அணி, தங்களின் கடைசி லீக்கில் பெங்களூரு அணியை சின்னசாமி ஸ்டேடியத்தில் எதிர்கொள்ள உள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என தெரியும் நிலையில் சென்னை அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மிக முக்கியமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் ஆடி வந்த அஸ்வின், தனது திறனை நிரூபித்து இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக ஆடி இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். சென்னை அணிக்கு எதிராக தற்போது நடந்த போட்டியில் ஷிவம் துபே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரின் விக்கெட்டை அஸ்வின் எடுத்திருந்தார்.

இந்த இரண்டு விக்கெட்டுகளை எடுத்ததும், சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளில் முதல் முறையாக 50 விக்கெட்டுகளை எடுத்த பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். சென்னை அணிக்காக அஸ்வின் ஆடியிருந்தாலும், அவரை விட நீண்ட ஆண்டுகள் சிஎஸ்கேவுக்காக ஆடிய பந்து வீச்சாளர் செய்யாத சாதனையை ராஜஸ்தான் அணிக்காக ஆடி வரும் அஸ்வின் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்