- Advertisement -
Homeவிளையாட்டுமுரளிதரனின் மாபெரும் வாழ்நாள் சாதனை.. 102 டெஸ்டில் முறியடித்து புது வரலாறு எழுதிய அஸ்வின்..

முரளிதரனின் மாபெரும் வாழ்நாள் சாதனை.. 102 டெஸ்டில் முறியடித்து புது வரலாறு எழுதிய அஸ்வின்..

- Advertisement-

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிகம் களமிறங்கி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின், ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு முக்கியமான சாதனையை உடைத்து தனது பெயரையும் அதில் எழுதி வருகிறார். இந்திய டெஸ்ட் வரலாறு கண்ட மிக முக்கியமான ஒரு வீரராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சுழற் பந்து வீச்சு மூலம் எதிரணிகளை திணற வைப்பதுடன் மட்டுமில்லாமல் தேவைப்படும் நேரத்தில் சிறப்பான பேட்டிங்கையும் வெளிப்படுத்தி அணியின் ரன்னும் உயர காரணமாக அமைந்துள்ளார்.

இதன் காரணமாக டெஸ்ட் ஆல் வுண்டர் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்திலும் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அஸ்வின், நிச்சயம் இந்திய அணிக்கு மிகப்பெரிய ஒரு சொத்து தான். சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சதமடித்து சாதனை புரிந்திருந்த அஸ்வி்ன், அதே டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளையும் கைப்பற்றி ருந்தார்.

- Advertisement -

தடுமாற்றத்துன் இந்திய அணி தொடங்கியிருந்த இந்த டெஸ்ட் போட்டி, பின்னர் மீண்டு நிற்பதற்கும் முக்கிய காரணமாக அஸ்வின் அமைந்திருந்தார். இதனால் இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றிருந்த அஸ்வின், சச்சினின் முக்கியமான ஒரு சாதனையை முறியடித்திருந்தார்.

டெஸ்ட் ரங்கில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் என இரண்டு விருதையும் சேர்த்து அதிக முறை எடுத்த இந்திய வீரராக சச்சின் டெண்டுல்கர் (19 முறை) முதலிடத்தில் இருந்தார். இதனை ஏற்கனவே சமன் செய்திருந்த அஸ்வின் இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றதன் மூலம் அதனை கடந்து சாதனை புரிந்திருந்தார்.

- Advertisement-

ரவிச்சந்திரன் ஸ்வின் 10 முறை ஆட்ட நாயகன் விருதையும் 10 முறை தொடர் நாயகன் விருதையும் வென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து வங்கதேச அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்டில் பந்து வீசி 5 விக்கெட் களை கைப்பற்றியிருந்த நிலையில் மொத்தமாக இந்த தொடரில் 11 விக்கெட்டுகளை சொந்தமாக்கி இருந்தார்.

முதல் டெஸ்டில் சதமடித்து ஒரு ஆல் ரவுண்டர் ரோலையும் சிறப்பாக செய்திருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், தொடர் நாயகன் விருதையும் வென்றிருந்தார். அப்படி இருக்கையில், அஸ்வினின் 11 வது தொடர் நாயகன் விருதாகவும் டெஸ்ட் அரங்கில் பதிவாகி இருந்தது. இதன் மூலம் முத்தையா முரளிதரனின் மாபெரும் சாதனை ஒன்றையும் அஸ்வின் சமன் செய்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிகம் முறை தொடர் நாயகன் வென்ற சாதனை முத்தையா முரளிதரனிடம் தான் இருந்தது. அவர் 11 முறை தனது கிரிக்கெட் பயணத்தில் தொடர் நாயகன் விருதை வென்றுள்ள நிலையில் அதனை சமன் செய்துள்ள அஸ்வின் நிச்சயம் இன்னொரு முறை அடுத்த டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருது வென்று அதனை முறியடிப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

முத்தையா முரளிதரன் பந்து வீச்சில் மட்டுமே கலக்கி தொடர் நாயகன் விருதை வென்றிருந்த நிலையில் அஸ்வின் ஆல் ரவுண்டராகவும் ஜொலித்ததால் தான் இத்தனை சீக்கிரமாக ஒரு ஜாம்பவானின் மாபெரும் சாதனையை சமன் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்