- Advertisement -
Homeவிளையாட்டுஹர்திக் பாண்டியாவுக்கு காயம்.. ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அடித்த லக்.. நாளைய போட்டியில் களமிறங்குவாரா? ரோகித் சர்மா...

ஹர்திக் பாண்டியாவுக்கு காயம்.. ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அடித்த லக்.. நாளைய போட்டியில் களமிறங்குவாரா? ரோகித் சர்மா ட்விஸ்ட்

- Advertisement-

வங்கதேச அணியுடனான போட்டியின் போட்டி இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவின் கால்களில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த போட்டியில் இருந்து விலகி ஓய்வெடுக்க சென்றதோடு, நியூசிலாந்து அணிக்கு எதிரான நாளைய போட்டியிலும் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக எந்த வீரர் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியா ஃபினிஷர் மற்றும் வேகப்பந்துவீச்சாளராக விளையாடி வந்தார். பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு போட்டியிலும் முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

இன்னும் சொல்லவேண்டுமென்றால், ஷர்துல் தாக்கூரை விடவும் ஹர்திக் பாண்டியா தான் உலகக்கோப்பை தொடரில் அதிக ஓவர்களை இந்திய அணிக்காக வீசியுள்ளார்,. இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கான மாற்று வீரர் யார் என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனிடையே இந்திய அணி வீரர்கள் தரம்சாலா மைதானத்தில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே தரம்சாலா மைதானத்தில் நாளை நடக்கவுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியாவுக்கு இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ஃபினிஷர் ரோலில் அளிக்கப்பட்டிருந்தது.

- Advertisement-

அதனால் ஹர்திக் பாண்டியாவின் இடத்தில் நிச்சயமாக சூர்யகுமார் யாதவ் களமிறங்க வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் தரம்சாலா மைதானத்தில் சுழற்பந்துவீச்சுக்கு ஓரளவுக்கு ஒத்துழைப்பு இருக்கும் என்பதால், அஸ்வினை தேர்வு செய்யவும் வாய்ட்ப்புகள் உள்ளது. ஆனால் அஸ்வினை தேர்வு செய்தால், 3 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்கும்.

அதேபோல் சிராஜ், பும்ரா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் வேகப்பந்துவீச்சாளர்களாக இருப்பார்கள். ஆனால் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவருக்கு பந்துவீச்சு எடுபடவில்லை என்றாலும், இந்திய அணி சிக்கலில் சிக்கும். இதனால் நாளை ஆட்டத்திற்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சற்று முன்