- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்த் விஷயத்துல தோனிய விட ரோஹித் மேல.. ஒரே ஒரு சம்பவத்தால் எமோஷனல் ஆன அஸ்வின்..

இந்த் விஷயத்துல தோனிய விட ரோஹித் மேல.. ஒரே ஒரு சம்பவத்தால் எமோஷனல் ஆன அஸ்வின்..

- Advertisement 1-

தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் ஒரு நிமிடம் மெய்சிலிர்க்க வைத்துள்ளது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் சொன்ன வார்த்தை. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 4 – 1 என்ற கணக்கில் வென்றிருந்தது அனைவரும் அறிந்தது. இதில் இந்திய அணியின் ரவிச்சந்திர அஸ்வின், 25 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்து இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சிறப்பையும் பெற்றிருந்தார்.

அது மட்டுமில்லாமல், டெஸ்டில் 500 விக்கெட்டுகள் என்ற அரிய மைல்கல்லையும் இந்த தொடரில் எட்டி இருந்தாலும் அதே நேரத்தில் சிக்கலான ஒரு தருணமும் அவருக்கு உருவானது. 500 விக்கெட்டுகளை தொட்ட அதே டெஸ்ட் போட்டிக்கு நடுவே திடீரென அஸ்வினின் தாயார் உடல்நிலை சரியில்லை என தகவல் வர ஒரே ஒரு நாள் சென்று விட்டு அடுத்த நாளிலேயே மீண்டும் அதே டெஸ்ட் போட்டியில் இணைந்து தனது அர்ப்பணிப்பை காட்டி இருந்தார் அஸ்வின்.

அவரது தாயார் நிலை திடீரென மோசமானதாகவும் கூறப்படும் நிலையில், இதனால் மனமடைந்து போயிருந்த அஸ்வினை தேற்றி அனுப்பியது ரோஹித் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் தான். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டு குறிப்பிட்டுள்ள அஸ்வின், “அம்மாவின் உடல்நிலை பற்றிய செய்தி வந்ததும் நான் ஒரு நிமிடம் உடைந்து போய் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தேன். ராஜ்கோட்டில் ஆறு மணிக்கு மேல் எந்த விமானமும் இருக்காது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் போது தான் டிராவிட் மற்றும் ரோஹித் எனது அறைக்கு வந்தனர்.

அப்போது ரோஹித் தைரியமாக இருக்கும்படி என்னிடம் கூறியதுடன், கமலேஷை அழைத்து என் அருகில் இருந்து பார்த்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தினார். அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் சார்ட்டட் ஃபிளைட் ரெடி செய்து தருவதாகவும் சொல்லி விட்டு சென்றார்.

- Advertisement 2-

நானே இந்திய கேப்டனாக இருந்தாலும் எனது அணியில் ஒரு வீரர் இப்படி இருந்தால் அவரைத் தேற்றி சென்று வாருங்கள் என்று கூறுவேன். ஆனால் இதுபோன்ற முயற்சிகளில் இறங்கி அந்த வீரர் எப்படி இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள நினைப்பேனா என்று எனக்கே தெரியாது.

நல்ல மனம் இருப்பதால் தான் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை தோனிக்கு நிகராக வெல்ல முடிந்தது. எத்தனையோ தலைவர்களுடன் நான் ஆடியுள்ளேன், ஆனால் ரோஹித்திடம் என்னமோ இருக்கிறது. தோனியே இப்படி பல விஷயங்கள் செய்திருந்தாலும் அவரை விட ஒரு பத்து அடி முன்னே நிற்கிறார் ரோஹித்” என அஸ்வின் மிகவும் எமோஷனலாக குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்