- Advertisement 3-
Homeவிளையாட்டுஅவ்ளோ தான் லிமிட்டு.. நிதானத்தை இழந்த அஸ்வின்.. கடைசி நிமிடத்தில் வெடித்த சண்டை..

அவ்ளோ தான் லிமிட்டு.. நிதானத்தை இழந்த அஸ்வின்.. கடைசி நிமிடத்தில் வெடித்த சண்டை..

- Advertisement 1-

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது ஆரம்பமாகி நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. முதல் டெஸ்டில் ஆடிய ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இல்லாததால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் சொதப்பும் என்றே ரசிகர்கள் கருதினர்.

அது பாதிக்கு மேல் உண்மையாகி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ரோஹித் சர்மா, சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் தாக்கத்தை ஏற்படுத்தாமல் அவுட்டாக, இதன் பின்னர் வந்த அறிமுக வீரர் ராஜத் படிதார், ஜெய்ஸ்வாலுடன் இணைந்து சிறப்பாக ரன் சேர்த்திருந்தார். அவரும் அவுட்டாக, பின்னர் மீண்டும் சில விக்கெட்கள் சிறிய இடைவெளியில் விழுந்தது.

மற்ற அனைவருமே வந்த வேகத்தில் நடையைக் கட்டிக் கொண்டிருக்க, இளம் வீரர் ஜெய்ஸ்வால் மட்டும் தனியாளாக நின்று நேர்த்தியாக ஆடி ரன் சேர்த்தார். ஆண்டர்சன் உள்ளிட்ட எந்த பந்து வீச்சாளர்களையும் தான் பேட்டிங்கில் சமாளித்து ரன் சேர்ப்பேன் என்ற தொனியில் ஆடிய ஜெய்ஸ்வால், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 179 ரன்களுடன் அவுட்டாகாமால் களத்தில் உள்ளார். இந்திய அணியும் 6 விக்கெட்டிற்கு 336 ரன்கள் சேர்த்துள்ள நிலையில், இரண்டாவது நாளில் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு மிகப்பெரிய கடமையும் உள்ளதாக தெரிகிறது.

முதல் டெஸ்டில் செய்த தவறை இந்திய பேட்ஸ்மேன்கள் செய்து வருவதால் மீதமுள்ள போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவிக்கும் போது கவனமாக அறிவிக்க வேண்டும் என பிசிசிஐ மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவிற்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

- Advertisement 2-

அது மட்டுமில்லாமல், அனுபவம் வாய்ந்த வீரர்களான புஜாரா, ரஹானே உள்ளிட்டோருக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்பதும் ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது. இதற்கிடையில், முதல் நாள் முடிவின் போது இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பான விஷயம், தற்போது அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கே எஸ் பரத் அவுட்டானதும் ரவி அஸ்வின் பேட்டிங் செய்ய வந்தார். முதல் நாளின் கடைசி ஓவர் முழுவதையும் எதிர்கொண்டிருந்த அவர், ஒரு பவுண்டரியையும் அடித்திருந்தார். இதன் பின்னர் போட்டி முடிந்ததும் கள நடுவர்களில் ஒருவரான எராஸ்மஸ்ஸிடம் திடீரென கோபத்தில் அஸ்வின் ஏதோ பேசியதாக தெரிகிறது.

இந்த வாக்குவாதம் சில நிமிடங்கள் இருக்க, அஸ்வின் முகத்தில் கொஞ்சம் கூட மகிழ்ச்சி இல்லை. இதற்கான பிரச்சனை என்ன என்பது தெரியாத நிலையில் ரசிகர்கள் பலரும் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்