- Advertisement 3-
Homeவிளையாட்டுஎலிமினேட்டர் போட்டிக்கு முன்பாக கோலிக்கு அஸ்வின் அனுப்பிய மெசேஜ்.. மேட்ச்சுக்கு நடுவே தெரிய வந்த உண்மை..

எலிமினேட்டர் போட்டிக்கு முன்பாக கோலிக்கு அஸ்வின் அனுப்பிய மெசேஜ்.. மேட்ச்சுக்கு நடுவே தெரிய வந்த உண்மை..

- Advertisement 1-

சில வீரர்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படாமல் போயிருந்தாலும் முக்கியமான போட்டிகள் என வரும்போது பட்டையைக் கிளப்பி வந்தனர். அந்த வகையில் முக்கியமான ஒரு வீரராக தற்போது இருந்து வருபவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த சில சீசனில் ஆடி வரும் நிலையில், இந்த சீசனின் ஆரம்பம் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

ராஜஸ்தான் அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்தாலும், அஸ்வினின் பந்து வீச்சு எந்த விதத்திலும் அவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், அதே வேளையில் கடைசியாக தொடர்ந்து தோல்விகளை ராஜஸ்தான் அணி சந்தித்த போது, அஸ்வினின் பந்து வீச்சு அப்படியே நேர்மாறாக அமைந்திருந்தது. தேவைப்படும் நேரத்தில் சிறப்பாக பந்து வீசி முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், அதையே ஆர்சிபி அணிக்கு எதிராகவும் தற்போது செய்துள்ளார்.

எலிமினேட்டர் என்ற முக்கியமான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டு ஆடி இருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். அவர்கள் டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்ய, தொடர்ந்து ஆடிய ஆர்சிபி, போல்ட் மற்றும் அஸ்வினை தவிர மற்ற பந்து வீச்சாளர்கள் ஓவரில் ரன் சேர்த்திருந்தது.

நான்கு ஓவர்கள் வீசி இருந்த அஸ்வின், 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் கேமரூன் க்ரீன் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தார். முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்திருந்தது. போல்ட் மற்றும் அஸ்வின் நன்றாக பந்து வீசியதால், ஆர்சிபி ரன் குவிப்பும் கட்டுப்படுத்தப்பட்டது.

- Advertisement 2-

இதனிடையே, ஆர்சிபி பேட்டிங் முடிந்த பின் பேசி இருந்த அஸ்வின், “இந்த தொடரின் முதல் பாதியை டெஸ்ட் தொடர் முடித்து விட்டு காயங்களுடன் வந்து ஆடியதால் சிறப்பாக பந்து வீச நான் போராடி இருந்தேன். ஆனால், கடந்த சில போட்டிகளில் நன்றாக பந்து வீசி இருந்தேன். போட்டிக்கு முன்பாக விராட் கோலிக்கு ‘வாருங்கள் இன்னொரு முறை சண்டை போடுவோம்’ என மெசேஜ் அனுப்பி இருந்தேன்.

கடந்த சில போட்டிகளில் எங்களின் பேட்டிங் நன்றாக இல்லை என்பது உண்மை தான். அதனை மூடி மறைக்கவும் நான் விரும்பவில்லை. ஆனால், அதே நேரத்தில் நாங்கள் ஆடிய பிட்ச்களையும் பார்க்க வேண்டும்” என அஸ்வின் கூறினார்.

சற்று முன்