- Advertisement 3-
Homeவிளையாட்டுநம்பர் 1 பவுலராக அஸ்வினை உருவாக்கிய தாயின் ஐடியா.. சோதனையை சாதனையா மாற்றிய சுழல் ஜாம்பவான்..

நம்பர் 1 பவுலராக அஸ்வினை உருவாக்கிய தாயின் ஐடியா.. சோதனையை சாதனையா மாற்றிய சுழல் ஜாம்பவான்..

- Advertisement 1-

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கும் சேர்த்து பெருமை தேடித் தந்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகள் என வந்து விட்டாலே எப்படிப்பட்ட பேட்ஸ்மேனாக இருந்தாலும் அஸ்வின் பந்தை சமாளித்து ஆடுவது மிக மிக கடினமான ஒன்றுதான்.

அந்த வகையில், தற்போது பல முக்கியமான பேட்ஸ்மேன்களை தனது பந்து வீச்சு மூலம் விக்கெட்டுகளாக மாற்றி 500 விக்கெட்டுகளை தொட்டு சாதனை புரிந்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். அணில் கும்ப்ளேவிற்கு பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் 500 விக்கெட்டுகளை தொட்டவர் என்ற அரிய சாதனை ரவிச்சந்திரன் அஸ்வினிடம் தான். அது மட்டுமில்லாமல், 50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450 என அனைத்து டெஸ்ட் விக்கெட்டுகளை அதிவேகமாக தொட்ட இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் வசம் தான் உள்ளது.

சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் ஆடி ஒருவர் சாதிக்க வேண்டும் என்றால் அதற்கு அவர்களின் பெற்றோர்கள் ஆதரவாக இருந்து மிக முக்கிய பங்காற்ற வேண்டும். அந்த வகையில் 500 விக்கெட்டுகளை எடுத்த பின் பேசியிருந்த அஸ்வின், இந்த சாதனையை தனது தந்தைக்கு அர்பணிப்பதாக மிக பெருமையுடன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மகன் 500 விக்கெட்டுகளை எடுத்து சாதனை புரிந்தது பற்றி அவரது தந்தையான ரவிச்சந்திரன் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

இதில் சிறுவயதில் இருந்தே அஸ்வின் எந்த அளவுக்கு கிரிக்கெட் மீது ஈடுபாடு உடையவராக இருந்தார் என்பது பற்றியும் கிரிக்கெட்டில் எப்படி தன்னை மேம்படுத்திக் கொண்டு தயாராகினார் என்பது பற்றியும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement 2-

அந்த வகையில் அஸ்வின் நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளராக மாறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது அவரது தாய் தான் என்றும் தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். முன்னதாக அஸ்வினுக்கு சிறு வயதில் மூச்சுத் திணறல் பிரச்சனை அதாவது வீசிங் ப்ராப்ளம் இருந்துள்ளது. இவர் வேகப்பந்து வீச்சாளராக இருந்த சூழலில், அவருக்கு வீசிங் பிரச்சனை இருந்துள்ளதால், வேகமாக ஓடி வந்து ஏன் நீ பந்து வீச வேண்டும் என்று அவரது தாயான சித்ரா கேள்வி எழுப்பி உள்ளார்.

அத்துடன் நடந்து வந்து மெதுவாக பந்து வீசு என அவர் ஐடியா கொடுக்கவே, பின்னர் தான் சுழற்பந்து வீச்சிற்காக பயிற்சி மேற்கொண்டுள்ளார் அஸ்வின். அவரது தாயாரின் முடிவு தான் இன்று உலக கிரிக்கெட் அரங்கில் நம்பர் 1 பந்து வீச்சாளராகவும் அஸ்வினை மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, மூன்றாவது டெஸ்டில் இருந்து தனது குடும்பத்தில் சில மெடிக்கல் எமர்ஜன்சி காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் பாதியிலேயே விலகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்