- Advertisement 3-
Homeவிளையாட்டு5 வருசத்துல இப்படி நடந்ததே இல்ல.. இங்கிலாந்து அணி ஆல் அவுட்டாகியும் அஸ்வினுக்கு நடந்த சம்பவம்..

5 வருசத்துல இப்படி நடந்ததே இல்ல.. இங்கிலாந்து அணி ஆல் அவுட்டாகியும் அஸ்வினுக்கு நடந்த சம்பவம்..

- Advertisement 1-

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு நாட்கள் முடிவுக்கு வந்துள்ளது. இன்னும் மூன்று நாட்கள் இந்த போட்டியில் மிச்சம் இருப்பதால் நிச்சயம் இந்த போட்டியில் முடிவு கிடைத்துவிடும். ஏனென்றால், இரண்டாவது இன்னிங்சிலேயே இந்திய அணி பேட்டிங்கை ஆரம்பித்து விட்டதால் மூன்றாவது நாளில் கூட போட்டி முடிவு காண வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.

முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஜெய்ஸ்வாலின் இரட்டை சதத்தின் உதவியுடன் 396 ரன்கள் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து தங்கள் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 253 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருந்தது. இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையை தடுமாற்றம் காண வைத்திருந்த பும்ரா, 6 விக்கெட்டுகள் எடுத்தார். தொடர்ந்து 143 ரன்கள் முன்னிலையுடன் தங்களின் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய கிரிக்கெட் அணி, 5 ஓவர்கள் முடிவுக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் டெஸ்டில் செய்த தவறுகளை சரி செய்து கொண்டு 171 ரன்கள் முன்னிலையில் இருக்கும் இந்திய அணி, இன்னும் அதிகமாக ரன் சேர்த்து விட்டாலே நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு கடினமான இலக்கை கொடுத்து அவர்களின் விக்கெட்டுகளை சாய்த்து விட முடியும்.

முன்னதாக அனுபவமில்லாத இளம் வீரர்கள் அதிகமாக இருப்பதாக எழுந்த விமர்சனத்தை சுக்கு நூறாக்கி இந்த போட்டியில் வெற்றி பெற்று நிச்சயம் கேப்டன் ரோஹித் ஷர்மா விமர்சகர்களுக்கு தக்க பதிலடியை கொடுப்பார் என்று தான் தெரிகிறது. இதனிடையே இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நடந்த மோசமான சாதனை ஒன்று பற்றி தற்போது பார்க்கலாம்.

- Advertisement 2-

இந்திய அணி தரப்பில் முதல் இன்னிங்சில் பும்ரா 6 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார். நம்பர் ஒன் இந்திய சுழற் பந்துவீச்சாளராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், ஒரு விக்கெட்டைக் கூட இந்த இன்னிங்சில் எடுக்கவில்லை.

அந்த வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் எதிரணியினர் ஆல் அவுட்டான போது அதில் ஒரு விக்கெட்டை கூட அஸ்வின் எடுக்காத முதல் இன்னிங்ஸ் என்ற பெயராகவும் இது பதிவாகியுள்ளது ரசிகர் மத்தியில் பேசு பொருளாகவும் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்