- Advertisement 3-
Homeவிளையாட்டுமேட்ச் ஜெய்க்குற நேரத்துல கூட.. டிராவிட் என்ன செஞ்சாரு தெரியுமா.. பயிற்சியாளரால் கலங்கிப் போன அஸ்வின்..

மேட்ச் ஜெய்க்குற நேரத்துல கூட.. டிராவிட் என்ன செஞ்சாரு தெரியுமா.. பயிற்சியாளரால் கலங்கிப் போன அஸ்வின்..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பை வென்று ஏறக்குறைய ஒரு இரவு ஆகிய போதிலும் இன்னும் எந்த ரசிகர்களாலும், கிரிக்கெட் வீரர்களாலும் அதனை கடந்து வரவே முடியவில்லை. பல ஆண்டுகள் கடினமாக உழைத்து தற்போது இந்திய அணிக்கு அதற்கான விடையும் கிடைத்துள்ளதால் இதை கொண்டாடி தீர்க்கவே அடுத்த சில நாட்கள் எடுத்துக் கொள்ளும் என தெரிகிறது.

இந்திய அணி கோப்பை வென்றது ஒரு பக்கம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தாலும் இன்னொரு புறம் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து தங்களின் ஓய்வையும் அறிவித்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து ஜடேஜாவும் ஓய்வை அறிவிக்க, இனிமேல் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மூவரையும் தாண்டி இந்திய அணி இந்த டி20 உலக கோப்பை வென்றதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் ஒருவர் என்றால் அது நிச்சயம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான். குறுகிய காலத்தில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி இருந்தாலும், 2007 ஆம் ஆண்டு உலக கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது அவரது தலைமையிலான இந்திய அணி.

அதன் பின்னர் அவர் ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்காமல் இருக்க கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்து வந்தார். மேலும் டி20 உலக கோப்பைத் தொடருடன் அவர் பதவிக்காலம் முடிவுக்கு வருவதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

- Advertisement 2-

இதனால் ரோஹித், கோலிக்கு நிகராக ஒரு வீரராக ஒரு முறை கூட உலக கோப்பையை வெல்ல முடியாமல் போன பயிற்சியாளராக அதனை வென்றெடுக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்க ஒட்டுமொத்த இந்திய அணியும் சேர்ந்து டிராவிட்டிற்காக அதனை நிறைவேற்றிக் கொடுத்துள்ளது.

எப்போதுமே சாந்தமாக இருக்கும் ராகுல் டிராவிட் உலக கோப்பையை கையில் பெற்றுக் கொண்டதும் சிறு குழந்தை போல துள்ளி குதித்தது பலரையும் நெகிழ வைத்திருந்தது. அப்படி ஒரு சூழலில் அவரைப்பற்றி தற்போது இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

“டிராவிட்டை பொறுத்தவரையில் அவர் ஒரு இடத்திற்கு போய் விமானத்தில் இருந்து இறங்கினால் திட்டங்களை வகுப்பதில் தான் மட்டுமே கவனமாக இருப்பார். மேலும் காற்று எங்கே வீசுகிறது என்பது வரையிலும் ஆராய்ந்து வைக்கும் டிராவிட்டிடம் இது பற்றி கேட்டால், இதில் எதாவது ஒரு 10 சதவீதம் கூட அணியின் வெற்றிக்கு உதவலாம் என நம்பிக்கையுடன் கூறுவார்.

டி20 உலக கோப்பையின் இறுதி போட்டியில் கூட இந்திய அணி வெற்றி பெரும் தருவாயில் கடைசி 3 பந்துகள் இருந்த போது கூட பயிற்சியாளராக நோட்டில் நிறைய விஷயங்களை குறித்து வைத்துக் கொண்டே இருந்தார். உலக கோப்பையை வெல்லும் சமயத்தில் கூட தனக்கான வேலையை நிறுத்தாமல் தொடர்ந்து அதில் தனது கவனத்தை செலுத்திக் கொண்டே இருந்தார்” என அஸ்வின் கூறியுள்ளார்.

சற்று முன்