- Advertisement 3-
Homeவிளையாட்டுஅம்மா ஹாஸ்பிடல்ல கண் தொறந்ததும் இதைத்தான் கேட்டாங்க.. ரசிகர்களையே மனம் கலங்க வெச்ச வார்த்தை..

அம்மா ஹாஸ்பிடல்ல கண் தொறந்ததும் இதைத்தான் கேட்டாங்க.. ரசிகர்களையே மனம் கலங்க வெச்ச வார்த்தை..

- Advertisement 1-

இந்திய அணியின் முன்னணி வீரராக இருப்பவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின். ஆரம்ப காலத்தில் பேட்டிங்கில் பெரிதாக சாதிக்க வேண்டும் என விரும்பிய அஸ்வின், பின்னர் விதியின் காரணமாக பந்து வீச்சு பக்கம் திரும்பி இருந்தார். ஆனால் அவர் பந்து வீச்சாளராக மாறியது இன்று வரையிலும் இந்திய அணிக்கு கைமேல் பலன் கொடுத்து வருகிறது.

எந்த அணியாக இருந்தாலும் எப்படிப்பட்ட பேட்ஸ்மேனாக இருந்தாலும், அஸ்வினின் சுழலில் சிக்கி தப்புவது மிக கடினமான ஒன்று தான். தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்து வரும் தொடரிலும் பட்டையைக் கிளப்பி வரும் அஸ்வின், இதே தொடரில் 500 வது விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். இரண்டாவது டெஸ்டிலேயே 500 விக்கெட்டை கைப்பற்ற வேண்டிய நிலை இருந்த போதும் நூலிழையில் அதனை தவற விட, மூன்றாவது டெஸ்டில் அந்த சாதனையை உடைத்து பல ஜாம்பவான்கள் இருக்கும் பட்டியலில் தனது பெயரையும் பதித்திருந்தார்.

அப்படி ஒரு சூழலில் தான் மூன்றாவது போட்டியில் பாதியில் திடீரென விலகினார் அஸ்வின். அவரது தாயார் உடல்நிலை மோசமாக இருந்ததாகவும் அதன் காரணமாக தான் அவர் போட்டியின் பாதியிலேயே பிசிசிஐ அனுமதியுடன் விலகியதாகவும் தகவல்கள் வெளியானது. தொடர்ந்து ஒரே நாளில் தாயைப் பார்த்துவிட்டு மீண்டும் அதே போட்டியில் திரும்பி இருந்த அஸ்வினை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பாராட்டுகின்றனர்.

இதனையடுத்து தரம்சாலாவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி, அஸ்வினுடைய 100 வது டெஸ்ட் போட்டியாகும். இந்த சமயத்தில் பேசியுள்ள அஸ்வின் தனது தாயின் உடல்நிலை சரியில்லாமல் ஆனபோது நடந்த சம்பவத்தை பற்றியும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement 2-

“மருத்துவமனைக்கு நான் சென்ற பின் எனது தந்தையும், தாயும், மனைவியும் என்ன சொல்வார்கள் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். சுயநினைவு வந்ததும் என் தாய் முதலில் என்னிடம், ‘ஏன் நீ வந்தாய்’ என்று தான் கேட்டார். டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருப்பதால் நான் போய் விளையாட வேண்டும் மருத்துவமனை பெட்டில் இருந்தபடி என்னை அறிவுறுத்தினார்.

இப்படி என்னுடைய மொத்த குடும்பமும் கிரிக்கெட்டால் அமைக்கப்பட்டு இருப்பதால் என்னுடைய கிரிக்கெட் பயணத்திலும் அவர்கள் தொடர்ந்து உதவி செய்து வருகின்றனர். எனது குடும்பத்தினருடைய வாழ்க்கையும் என்னுடைய கிரிக்கெட் போட்டியுடன் பிணைந்துள்ளது என்றே சொல்லலாம். என்னுடைய அப்பாவோ நான் ஏதோ இன்றும் முதல் போட்டியில் ஆடுவது போல தான் எனது ஆட்டத்தை பார்த்து ரசித்து வருகிறார்” என அஸ்வின் மிக நெகிழ்ச்சி பொங்க குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்