- Advertisement 3-
Homeவிளையாட்டுஎன்னை டீம்ல இருந்து தூக்க பிளான் பண்ணாங்க.. இக்கட்டான நேரத்தில் அஸ்வின் கையிலெடுத்த ஐடியா..

என்னை டீம்ல இருந்து தூக்க பிளான் பண்ணாங்க.. இக்கட்டான நேரத்தில் அஸ்வின் கையிலெடுத்த ஐடியா..

- Advertisement 1-

இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் அத்தனை வேகமாக இந்த ஒரு சாதனைக்கு சொந்தக்காரராக ஆகவில்லை. தனது கிரிக்கெட் பயணத்தில் பல்வேறு தடைகளை கடந்துதான் மெல்ல மெல்ல டெஸ்ட் போட்டிகளிலும் தன்னை முன்னிறுத்திக் கொண்டதுடன் எப்படிப்பட்ட நட்சத்திர பேட்ஸ்மேனாக இருந்தாலும் தனது பந்தை சமாளித்து ஆடுவது கடினம் என்றும் பலமுறை நிரூபித்து காட்டியுள்ளார்.

ஆரம்பத்தில் ஐபிஎல் போட்டிகளில் ஆடி வந்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பின்னர் சர்வதேச அணிக்கான வாய்ப்பு கிடைத்திருந்தது. அதனை பயன்படுத்திக் கொண்டு 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் நுழைந்த அஸ்வின் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக முக்கியமான வீரராக இந்திய அணிக்காக உருவெடுத்துள்ளார்.

அவர் நல்ல ஃபார்மில் இருக்கும்போது அவர் இல்லாமல் எந்த டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி ஆடி விட முடியாது என்ற ஒரு நம்பிக்கையையே உருவாக்கி விட்டார் என்றே சொல்லலாம். அப்படி இருந்தாலும் நடுவே சில ஆண்டுகள் அஸ்வினால் தொடர்ந்து கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இதன் காரணமாக சாஹல், குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் வர அஸ்வினுக்கான வாய்ப்பு பெரிய அளவில் கிடைக்காமல் போனது.
.
அப்படி ஒரு சூழலில் தான் தனக்கு மீண்டும் கிடைத்த ஒரு வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட அஸ்வின், தற்போது வரை இந்திய அணிக்காக ஆடி வருவதுடன் இன்னும் இரண்டு நாட்களில் நூறாவது டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளார். 100 வது டெஸ்ட் போட்டியில் ஆடும் 14 வது இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ள அஸ்வின், சமீபத்தில் தனது கிரிக்கெட் உலகில் நடந்த திருப்புமுனை பற்றி சில கருத்துக்களை பேசி உள்ளார்.

“இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடர் ஒன்றில், குக், பீட்டர்சன் என அனைவருமே ரன்கள் அடித்திருந்தனர். என்னுடைய பந்துவீச்சும் அப்போது சிறப்பாக இல்லை என்ற பட்சத்தில் என்னை அணியிலிருந்து நீக்குவதற்கான முயிற்சிகளும் இருந்தது. இது பற்றி ஒரு தேர்வுக்குழு உறுப்பினர் கூட என்னுடன் பேச்சுவார்த்தை நடத்த எனக்கு நடுக்கமாகவே அப்போது இருந்தது.

- Advertisement 2-

அப்படியெல்லாம் இருந்த போதிலும் அந்த ஒரு விஷயம் தான் ஒரு ஐந்து சதவீதமாவது நான் முன்னேறுவதற்கான ஒரு வழியையும் எனக்கு உருவாக்கி கொடுத்தது” என தெரிவித்துள்ளார். அஸ்வின் கூறியது போல கடந்த 2012 ஆம் ஆண்டு இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்தது. அதன் பின்னர் இதுவரை எந்த டெஸ்ட் தொடரிலும் இந்திய மண்ணில் அவர்கள் தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்