- Advertisement -
Homeவிளையாட்டுஅம்பத்தி ராயுடு இடத்தில் சிஎஸ்கேவுக்கு ஆடப்போகும் வீரர்.. அஸ்வின் சொன்ன பெயர்.. அட, இவரும் சீனியர்...

அம்பத்தி ராயுடு இடத்தில் சிஎஸ்கேவுக்கு ஆடப்போகும் வீரர்.. அஸ்வின் சொன்ன பெயர்.. அட, இவரும் சீனியர் வீரர் தாங்க..

- Advertisement-

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் நடைபெற இன்னும் சரியாக 2 வாரங்கள் கூட இல்லை. அப்படி இருக்கையில் மொத்தம் உள்ள பத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை எடுக்க திட்டம் போட்டு வருகிறது என்பதை டிசம்பர் 19 ஆம் தேதி அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதற்கிடையில் கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் நிபுணர்கள் பலரும் எந்தெந்த அணியில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் ஏலத்தில் தேர்வு செய்தால் அவர்கள் அணி பலம் அடைந்து விளங்கும் என்பது குறித்தும் தங்களின் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதே வேளையில் மற்ற அனைத்து அணிகளும் சிறந்த இளம் வீரர்களையும், புதுப்புது வீரர்களையும் தங்கள் அணியல் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யும் சூழலில் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதும் முப்பதுக்கு வயது கடந்து விளங்கும் சீனியர் வீரர்களை தங்கள் அணியில் எடுத்து சிறப்பாக ஆட வைக்கும் முயற்சியில் தான் ஈடுபடுவார்கள். அந்த வகையில் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, மொயீன் அலி, ரஹானே என சமீபத்திய ஐபிஎல் சீசன்களில் சென்னை அணிக்காக யாரும் எதிர்பாராத வகையில் சிறப்பாக ஆடிக் கொடுத்த வீரர்கள் என இவர்கள் பெயரை கூறலாம்.

- Advertisement -

இதனிடையே சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வந்து அம்பத்தி ராயுடுவை அந்த அணி விடுவித்திருந்தது. அவர் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்து தனது ஓய்வை அறிவித்திருந்த சூழலில், தற்போது அவரது இடத்தில் சிஎஸ்கே அணி எந்த வீரரை குறிவைக்கும் என்பதையும் எதிர்பார்த்து வருகின்றனர்.

அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக அவரைப் போன்று சீனியர் வீரரை சிஎஸ்கே அணி எடுக்க முயற்சி செய்யுமா அல்லது அந்த இடத்தில் ஒரு இளம் வீரரை இலக்காக வைத்து ஏலத்தில் போட்டி போடுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அப்படி இருக்கையில் ராயுடுவுக்கு பதிலாக எந்த வீரரை சிஎஸ்கே தேர்வு செய்யும் என்பது குறித்து இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement-

“ஏலத்தில் கருண் நாயரை எடுக்க சிஎஸ்கே அணி போட்டி போடும் என்று எனக்கு தெரிகிறது. அதிரடி வீரர் ஷாருக்கான்மிடில் ஆர்டரில் பொருத்தமான வீரராக இருக்க மாட்டார். சமீபத்தில் நடந்த சையது முஷ்டாக் அலி தொடரிலும் கருண் நாயர் சிறப்பாக ஆடி உள்ளதால் அவரை மஞ்சள் நிற ஜெர்சியில் பார்க்க தயாராக இருங்கள்.

சுழற்பந்து வீச்சை மிக சிறப்பாக எதிர்த்து ஆடும் கருண் நாயர், நிச்சயம் சேப்பாக் போன்ற ஆடுகளங்களில் சிறப்பாக செயல்படுவார். இதனால் அவரை நான்காவது வீரராக சிஎஸ்கே அணியில் இடம்பெற வைக்க தோனி விரும்புவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என அஸ்வின் கணித்துள்ளார்.

சற்று முன்