உலகக்கோப்பை அணியில் திலக் வர்மா வேண்டும்.. காரணத்தோடு சொல்லும் ரவிச்சந்திரன் அஸ்வின்

- Advertisement -

இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 2 மாதங்களுக்கும் குறைவான நாட்களே உள்ளது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் உலகக்கோப்பைக்கான உத்தேச அணியை அறிவித்துள்ள நிலையில், இந்திய அணியோ இதுவரை ஆசியக் கோப்பைக்கான அணியை கூட அறிவிக்கவில்லை.

இதனால் உலகக்கோப்பைக்கு இந்த வீரரை தேர்வு செய்ய வேண்டும், அந்த வீரரை தேர்வு வேண்டும் என்று முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர். அந்த பட்டியலில் இளம் வீரர் திலக் வர்மாவும் இணைந்திருக்கிறார். ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டி20 போட்டிகளிலும் திலக் வர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இடதுகை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதால் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லையென்றால் 4வது வீரராக களமிறக்க திலக் வர்மாவை தேர்வு செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. அந்த குரலில் முக்கியமான குரலாக இந்திய நட்சத்திர வீரர் அஸ்வினின் குரல் அமைந்துள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும் போது, ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சன் மிகச்சிறப்பாக விளையாடி இருக்கிறார்.

ஆனால் இந்திய அணியில் போதுமான பேக் அப் வீரர்கள் இல்லையென்று நினைக்கிறேன். அதனால் திலக் வர்மாவையும் இந்திய அணி ஒரு ஆப்ஷனாக பார்க்க வாய்ப்புகள் உள்ளது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவர் இடதுகை பேட்ஸ்மேனாக உள்ளார். தற்போதைய இந்திய அணியில் ஜடேஜாவை தவிர்த்து வேறு எந்த இடதுகை பேட்ஸ்மேனும் இல்லை.

- Advertisement -

அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு அகர், இங்கிலாந்துக்கு மொயின் அலி, அடில் ரஷித் என்று ஏராளமான ஆஃப் ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். இதன் காரணமாகவே திலக் வர்மாவின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் நிச்சயம் திலக் வர்மா முக்கியமான ஆப்ஷனாக தேர்வு குழு முன் இருப்பார். அதுமட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் திலக் வர்மா ஆட்டத்தை பார்த்த யாராக இருந்தாலும் பிரம்மித்து போவார்கள்.

திலக் வர்மாவிடம் கொஞ்சம் ரோகித் சர்மாவை பார்க்க முடிகிறது. இந்திய வீரர்கள் சாதாரணமாக புல் ஷாட் ஆட மாட்டார்கள். ஆனால் திலக் வர்மா அசால்ட்டாக புல் ஷாட் ஆடுகிறார். ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பெரும்பாலும் புல் ஷாட் அடிப்பதி இயற்கையான திறமையான இருக்கும். அதுபோல் திலக் வர்மாவும் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்