- Advertisement 3-
Homeவிளையாட்டுஅந்த ஒரு பந்தை அடிக்க கோலி எனக்கு 7 விதமான ஆப்ஷன்களை சொன்னார். நான் மிரண்டு...

அந்த ஒரு பந்தை அடிக்க கோலி எனக்கு 7 விதமான ஆப்ஷன்களை சொன்னார். நான் மிரண்டு போய்விட்டேன் – அஸ்வின் பகிர்ந்த உலகக் கோப்பை சம்பவம்

- Advertisement 1-

உலகக் கோப்பைக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்த பேச்சுகளை நாம் தொடர்ந்து பார்க்க முடிகிறது. அக்டோபர் 15 ஆம் தேதி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் நிச்சயம் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றே கூறலாம்.

கடந்த ஆண்டு இதே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய டி20 உலகக் கோப்பை போட்டியை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. ஆஸ்திரேலியாவில் நடந்த அந்த போட்டியில் விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி மகத்தான வெற்றியை பெற்றது. அந்த போட்டியின் பரபரப்பான கட்டத்தில் 1 பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் அஸ்வின் களத்திற்கு வந்தார்.

அந்த நிலையில், களத்தில் கோலி தன்னிடம் பேசிய சில விடங்களை அஸ்வின் ஒரு வீடியோவில் கூறி உள்ளார். அவர் பேசுகையில், “தினேஷ் கார்த்திக் அந்த நேரத்தில் அவுட் ஆனதால் நான் மனதிற்குள் அவரை திட்டிக்கொண்டே களத்திற்கு வந்தேன். நான் அப்படி வரும்போதே, என்னமாதிரியான ஒரு மகத்துவமான நிலையில் நான் களத்திற்கு வந்திருக்கிறேன் என்பதை உணர்ந்தேன்.

அந்த மாதிரியான ஒரு ரசிகர் பட்டாளத்தை அதற்க்கு முன் நான் பார்த்தது கிடையாது. எல்லோரும் அப்படி கத்திக்கொண்டிருந்தார்கள். அப்போது கோலி என்னிடம் வந்து அந்த ஒரு பந்தை ஆடுவதற்கு ஏழு விதமான ஆப்ஷன்களை சொன்னார். நான் அத்தகைய ஷாட்களை ஆடக்கூடியவனாக இருந்தால் ஏன் 8வது இடத்தில் களமிறங்கப்போகிறேன் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன். ஆனால் அதை நான் கோலியிடம் அப்போது கூறவில்லை.

- Advertisement 2-

நான் அவருடைய கண்களை அப்போது பார்த்தேன். அதில் எப்படியும் வென்றே ஆக வேண்டும் என்ற ஒரு வெறி இருந்தது. அவர் வேறு ஒரு கிரகத்தில் இருக்கார், நாம் பூமிக்கு வருவோம் என்று நான் எண்ணிக் கொண்டேன். பிறகு நான் ஆட துவங்கியபோது பௌலர் வைடு போட்டுவிட்டார். அப்போதே நான், நாம் ஜெய்துவிட்டோம் என்பதை உணர்ந்தேன்.

அதன் பிறகு அந்த கடைசி ஒரு பந்தை நான் அடித்தேன், இந்திய அணி வென்றது. நான் தூங்க செல்வதற்கு முன்பு அந்த போட்டி குறித்து எப்போதும் நினைப்பேன். ஒருவேளை அந்த பந்து என் பேடில் பட்டிருந்தால் என்ன ஆகி இருக்கும் என்றெல்லாம் நான் யோசித்தது உண்டு. ஆனால் அந்த போட்டியை நான் தான் முடிக்க வேண்டும் என்று விதி இருந்திருக்கிறது போல என்று கூறி உள்ளார் அஸ்வின்.

சற்று முன்