- Advertisement 3-
Homeவிளையாட்டுபிளேயிங் Xlல் களமிறங்கவில்லை என்றால் என்ன செய்வது.. மனரீதியாக தயாராகினேன்.. உடைந்து பேசிய அஸ்வின்!

பிளேயிங் Xlல் களமிறங்கவில்லை என்றால் என்ன செய்வது.. மனரீதியாக தயாராகினேன்.. உடைந்து பேசிய அஸ்வின்!

- Advertisement 1-

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதற்க்கு முன் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. இதற்கு இந்திய வீரர்கள், ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் கூட கடுமையாக விமர்சித்தார். அதேபோல் இந்திய அணியின் தோல்விக்கு அஸ்வினை சேர்க்காததும் மறைமுக காரணமாக அமைந்தது.

இதனால் விரக்தியடைந்த அஸ்வின், இந்திய அணியில் நண்பர்கள் இருந்தார்கள். ஆனால் தற்போது உடன் விளையாடுபவர்கள் என்ற நிலையிலேயே வீரர்கள் உள்ளனர் என்று தெரிவித்தார். இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறக்கப்பட்டார். இதில் சிறப்பாக பந்துவீசிய அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய 16வது வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்தார். அதேபோல் சமகாலத்தில் கிரிக்கெட் ஆடும் வீரர்களில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற ஆண்டர்சன் சாதனையையும் ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடித்தார். இதனால் அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாதது குறித்து அஸ்வின் பேசியுள்ளார். அதில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தொடர்ச்சியாக இருமுறை முன்னேறியும் எங்களால் வெற்றிபெற முடியவில்லை. அது நிச்சயம் வருத்தமாக உள்ளது. அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் எப்படி விளையாட வேண்டும் என்றும் தயாராக இருந்தேன்.

- Advertisement 2-

ஒருவேளை பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது, ஓய்வறையில் இருந்து இந்திய அணிக்கு எப்படி உதவ வேண்டும் என்பதிலும் தெளிவுடன் இருந்தேன். உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாக அனைத்து முடிவுகளுக்கு தயாராக இருந்தேன். வரலாற்றில் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் நம் விளையாட்டு மோசமாக இருக்கும் போது, எப்படி மீள்கிறோம் என்பதும், அதில் இருந்து என்ன கற்கிறோம் என்பதும் முக்கியம் என்று நினைக்கிறேன். நான் அப்படிதான் கற்று முன்னேறி வருகிறேன். ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் ஒரு சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டால் கூட போதுமானது. ஆனால் சர்வதேச கிரிக்கெட் அப்படியல்ல. ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்