- Advertisement 3-
Homeவிளையாட்டுஆஸி அணிகிட்ட இருந்து அவர ஒளிச்சு வைக்கிறோம்.. பைனல்ல அவர் விளையாடுவார்... உ.கோ-கு முன்...

ஆஸி அணிகிட்ட இருந்து அவர ஒளிச்சு வைக்கிறோம்.. பைனல்ல அவர் விளையாடுவார்… உ.கோ-கு முன் ரிதமிற்கு வந்துடுவார் – ரோஹித் சர்மாவின் ஸ்கெட்ச்

- Advertisement 1-

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் ஆஃப் ஸ்பின்னர்கள் இல்லாமல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஆசியக் கோப்பை தொடரின் போது நட்சத்திர ஸ்பின்னரான அக்சர் படேல் காயம் அடைந்தார்.

இதன் காரணமாக கடைசி நேரத்தில் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டு, பிளேயிங் லெவனிலும் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் ஒரு ஆஃப் ஸ்பின்னர்களான அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டது குறித்து ரோகித் சர்மா பேசும் போது, அஸ்வின் தேர்வு செய்யப்பட்டதற்கு அவரின் அனுபவம் தான் காரணம். சுமார் 100 டெஸ்ட் போட்டிகள், 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார் அஸ்வின். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். அஸ்வின் போன்ற வீரர்களுக்கு உடல் வலிமையை விடவும் மூளையும் வலிமை அதிகம். அவரிடம் பேச வேண்டும் என்ற முடிவெடுத்த போது, அவரின் உடல்நிலை பற்றி அறிந்தோம்.

அவர் தற்போது கிரிக்கெட் விளையாடவில்லை என்று சொல்ல முடியாது. ஒருநாள் போட்டியில் தான் விளையாடவில்லையே தவிர, கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடர், டிஎன்பிஎல் என்று தொடர்ச்சியாக விளையாடுகிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர் அவருக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். அவரின் உடல்நிலையும் தெரிய வரும்.

- Advertisement 2-

குல்தீப் யாதவ் ஒன்றரை ஆண்டு காலமாக பார்த்து வருகிறோம். அவரை ஆஸ்திரேலிய அணியிடம் இருந்து ஒளித்து வைக்க விரும்புகிறோம். அவர் பைனல் போட்டியில் மட்டுமே விளையாட வைக்க அதுவும் ஒரு காரணம். அதே சமயம் முதல் இரண்டு போட்டிகளில் அவர் ஓய்வில் இருப்பது நல்லது. பயிற்சி போட்டிகள் சில இருப்பதால் உலககோப்பைக்கு முன் அவர் நிச்சயம் நல்ல ஒரு ரிதமிற்கு வந்துவிடுவார்.

ஆசியக் கோப்பை தொடரில் அதிக வாய்ப்பை பெறாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக உலகக்கோப்பை வருவதால், அதற்கேற்ப அனைவரையும் தயார் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்