- Advertisement 3-
Homeவிளையாட்டு10 நாட்களுக்கு முன்பே நாங்கள் வெஸ்ட் இண்டீஸ்சுக்கு வந்ததற்கான காரணம் இவர் தான். இந்த இளம்...

10 நாட்களுக்கு முன்பே நாங்கள் வெஸ்ட் இண்டீஸ்சுக்கு வந்ததற்கான காரணம் இவர் தான். இந்த இளம் வீரர் சம்பவம் பண்ணுவார் – அஸ்வின் பேச்சு

- Advertisement 1-

கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் இடம்பெறாதது பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் முக்கியமான இந்த இறுதிப் போட்டியில் உலகில் நம்பர் 1 பந்துவீச்சாளரான அஸ்வினை அணியில் தேர்ந்தெடுக்காதது தான் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவ காரணம் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அஸ்வின் டொமினிக்கோ மற்றும் டிரினிடாட் என இரண்டு நகரங்களில் நடைபெறும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பிளேயிங் லெவனில் இடம்பெற்று விளையாடுவார் என்று தெரிகிறது.

எதிர்வரும் ஜூலை 12-ஆம் தேதி துவங்க இருக்கும் இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு பயணித்துள்ள இந்திய அணியானது தற்போது பயிற்சி போட்டியிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக தமது அணியின் வீரர்கள் முழுமையாக தயாராக அதிக முக்கியத்துவம் கொடுத்து பயணித்து வருகிறார் என்று தமிழக வீரர் அஷ்வின் கூறியுள்ளார் இதுகுறித்து பேசியுள்ள அஷ்வின் கூறுகையில் : ஜெட் லேகில் இருந்து விடுபட 10 நாட்கள் கால அவகாசம் தேவைப்படும். அதன்காரணமாகவே நாங்கள் முன்கூட்டியே இங்கு வந்துள்ளோம்.

- Advertisement 2-

எங்களது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இப்போது இந்த தொடருக்காக நாங்கள் தயாராக அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். இந்த தொடருக்கான பயிற்சிகளை முறையாக நாங்கள் மேற்கொண்டால் முடிவுகள் தானாக கிடைக்கும் என அஸ்வின் கூறியுள்ளார். மேலும் இந்திய அணியில் தற்போது நிறைய புதிய மற்றும் உற்சாகமான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதோடு எங்களது அணியில் முகேஷ் குமார் இடம்பெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டிற்கு இது ஒரு உற்சாகமான நேரம் என அஸ்வின் கூறியுள்ளார். அதேபோன்று இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பல இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஜெயதேவ் உனட்கட் இந்த தொடரில் அதிக ரன்கள் எடுப்பார் என்று நாம் நினைக்கிறன் என கூறி உள்ளார் அஸ்வின்.

சற்று முன்