- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்த வாய்ப்பை விட்டுடாதீங்க.. அஸ்வின் படைக்க போகும் புது வரலாறு.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இந்த வாய்ப்பை விட்டுடாதீங்க.. அஸ்வின் படைக்க போகும் புது வரலாறு.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

- Advertisement 1-

இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆட உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் வரும் 25 ஆம் தேதியன்று ஆரம்பமாகிறது. மேலும் மார்ச் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ள சூழலில், ஏறக்குறைய இந்த ஆண்டின் மிக முக்கியமான கிரிக்கெட் தொடராகவும் இது பார்க்கப்பட்டு வருகிறது.

இங்கிலாந்து மற்றும் இந்தியா என இரு பெரும் தலைகள் மாறி மாறி மோதிக் கொள்ள அந்த அணிகளில் இடம்பெற்றிருக்கும் நட்சத்திர வீரர்களும் தங்களின் பலத்தை வெளிப்படுத்துவார்கள். இதனால் போட்டிக்கு நடுவே அனல் பறக்கும் என்பதால் ரசிகர்களுக்கும் தாறுமாறான இந்த விருந்தாகவும் இந்த தொடர் அமைய அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இந்தியாவில் வைத்து இந்த தொடர் நடைபெற உள்ளதால் பிட்ச்கள் சுழற்பந்து வீச்சுக்கு அதிகம் கை கொடுக்கும் என தெரிகிறது. இதனால், அதிரடி ஆட்டத்தை பெரிய அளவில் டெஸ்ட் போட்டிகளில் நம்பி வரும் இங்கிலாந்து அணிக்கு சவால்கள் அதிகம் உருவாகலாம் என்றும் தெரிகிறது. இதனிடையே, டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் நம்பர் 1 சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

எத்தனை பெரிய பேட்ஸ்மேனாக இருந்தாலும் இந்திய மண்ணில் அஸ்வின் சூழலை எதிர்கொள்ளும் போது நிச்சயம் அவர்கள் ஒருவிதமான தடுமாற்றத்தை கண்டு விடுவார்கள். அந்த அளவுக்கு போட்டிக்கு போட்டி தனது பந்து வீச்சில் மாற்றத்தை வெளிப்படுத்தும் ரவிச்சந்திரன் அஸ்வின், எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்து வருகிறார்.

- Advertisement 2-

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் என நிரம்பிக் கிடக்கும் முக்கிய பேட்ஸ்மேன்களை காலி செய்ய இந்திய அணியின் துருப்புச்சீட்டாக அஸ்வின் இருப்பார் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சில முக்கியமான சாதனைகளையும் ரவிச்சந்திரன் அஸ்வின் படைப்பதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

அணில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் இந்திய அணிக்காக கலக்கி வரும் அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 490 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இன்னும் 10 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தும் பட்சத்தில் 500 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டியில் தொட்ட சிறப்பும் அவரை வந்து சேரும்.

இன்னொரு பக்கம், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 12 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்த முடிந்தால் மற்றொரு மகத்தான சாதனை மகுடத்துக்கும் அவர் சொந்தக்காரர் ஆகலாம். அதாவது, இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்டில் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெறுவதற்கும் அசத்தலான பாதை ஒன்று உருவாகி உள்ளது. ஐந்து போட்டிகளில் 12 விக்கெட்டுகளை எடுத்து மிக முக்கியமான இந்த சாதனையை அஸ்வின் படைப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் குறிப்பிட்டு வருகின்றனர்.

சற்று முன்