- Advertisement 3-
Homeவிளையாட்டு100 வது டெஸ்டில் கோலியின் ரெக்கார்டை காலி செய்ய போகும் அஸ்வின்?.. சச்சினுக்கு அப்புறம் இணைய...

100 வது டெஸ்டில் கோலியின் ரெக்கார்டை காலி செய்ய போகும் அஸ்வின்?.. சச்சினுக்கு அப்புறம் இணைய வாய்ப்பு..

- Advertisement 1-

ரவிச்சந்திரன் அஸ்வினுடைய கிரிக்கெட் பயணத்தில் மார்ச் 7ஆம் தேதி மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. இதுவரை 99 டெஸ்ட் போட்டிகள் ஆடி, அதிவேகமாக 500 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது பந்து வீச்சாளர் என்ற சிறப்பை பெற்றதுடன் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் மிக முக்கிய தூணாக இந்திய டெஸ்ட் அணிக்கு இருந்து வருகிறார்.

ஒரு பக்கம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் கலக்கும் அதிக வீரர்களையும், பவுலிங் கலக்கும் அதிகம் வீரர்களையும் தனித்தனியாக பார்த்திருப்போம். ஆனால் அஸ்வினை போன்று தேவையான நேரத்தில் பந்துவீச்சில் உதவுவதுடன் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் கூட நிதானமாக ஆடி பல போட்டிகளில் இந்திய அணியை தோல்வியில் இருந்தும் தவிர்த்து உள்ளார்.

இப்படி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய சொத்தாக பார்க்கப்படும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளை (07.03.2024) தர்மசலாவில் மோதவுள்ள டெஸ்ட், நூறாவது டெஸ்ட்டாக அமைந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் நூறாவது டெஸ்ட் போட்டி ஆடும் 14 வது வீரர் என்ன மகத்தான சிறப்பையும் அஸ்வின் பெற்றுள்ள நிலையில் அவரது பந்துவீச்சு இந்த போட்டியில் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் துடியாய் துடித்து வருகின்றனர். இன்னொரு புறம் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் அஸ்வின் கிரிக்கெட் பயணத்தில் முக்கிய மைல்கல்லான இதற்கு வாழ்த்துக்களையும் அதே வேளையில் இன்னும் பல சாதனைகளை இந்த போட்டியில் அவர் படைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

- Advertisement 2-

அதிகம் பந்து வீச்சாளர்களின் சாதனையை அடித்து நொறுக்கி வரும் அஸ்வினுக்கு தற்போது இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் மிக முக்கியமான சாதனை ஒன்றை சமன் செய்யவும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

இந்திய அணி வென்ற 59 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பங்கெடுத்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக அஸ்வின் ஆடிய 99 போட்டிகளில் இந்திய அணி 58 டெஸ்ட்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒருவேளை இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றால், அஸ்வின் ஆடிய டெஸ்டில் 59 வது வெற்றியாக இது பதிவாகும்.

கோலியின் தனித்துவமான சாதனையை அஸ்வின் சமன் செய்வதற்கான வாய்ப்பு இந்த டெஸ்ட் போட்டியில் அமைய உள்ள நிலையில் இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணி வெற்றி பெற்ற 72 டெஸ்டில் பங்கெடுத்து முதலிடத்தில் உள்ளார். அதேபோல சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அஸ்வின் ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்திய அணி 58 டெஸ்டில் வென்ற போது பங்கெடுத்த வீரராக புஜாரா உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்