- Advertisement 3-
Homeவிளையாட்டுரோஹித் கேப்டன்சி சரியில்ல.. மறைமுகமாக தாக்கிய ரவிச்சந்திரன் அஸ்வின்?.. இந்தியா டீம்ல என்னதான் நடக்குது..

ரோஹித் கேப்டன்சி சரியில்ல.. மறைமுகமாக தாக்கிய ரவிச்சந்திரன் அஸ்வின்?.. இந்தியா டீம்ல என்னதான் நடக்குது..

- Advertisement 1-

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளைப் போல மூன்றாவது டெஸ்டிலும் இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. இந்திய மண்ணில் அவர்கள் அதிக பலத்துடன் இருந்த போதிலும் அதனை அசால்டாக டீல் செய்து வரும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, மூன்றாவது போட்டியில் பேஸ்பால் ஆட்டத்தை கையில் எடுத்து ஆடி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

தொடக்கத்தில் இளம் வீரர்கள் சொதப்பிய பின் அதிலிருந்து மீண்டு வந்த இந்திய அணி, ரோஹித் மற்றும் ஜடேஜாவின் சதத்தால் 445 ரன்கள் குவித்திருந்தது. முதல் இன்னிங்சில் இது ஒரு சிறந்த ஸ்கோராக பார்க்கப்பட்டாலும், இங்கிலாந்து அணி தற்போது ஆடி வரும் ஆட்டத்திற்கு இதனையும் கடந்து விடுவார்கள் என்றே தோன்றுகிறது. இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து 207 ரன்கள் எடுத்துள்ளது.

அதிலும் தொடக்க வீரர் பென் டக்கட், 133 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் உள்ளார். அவர் இதே அதிரடி ஆட்டத்தை தொடரும் பட்சத்தில் மூன்றாம் நாளின் முதல் செஷனிலேயே அவர் 200 ரன்களை எட்டவும் வாய்ப்புள்ளது. பொதுவாக இந்திய மண்ணில் எதிரணி வீரர்கள் 50, 100 ரன்கள் கடக்கவே பெரும்பாடுபடுவார்கள். அப்படி இருந்தும் இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து வருகின்றனர்.

இதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மிகச்சிறந்த திட்டங்களை வகுத்து இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்களை வேகமாக அவுட் எடுக்க வேண்டும் என்று ஒரு நெருக்கடி சூழலும் மூன்றாவது நாளில் இந்திய அணிக்கு உருவாகியுள்ளது.

- Advertisement 2-

இந்த நிலையில், பென் டக்கட்டை அவுட் எடுப்பதற்கான வாய்ப்பு இருந்தும் அதனைத் தவற விட்டதாக கிரிக்கெட் ரசிகர்கள் ரோஹித் சர்மாவை விமர்சனம் செய்து வருகின்றனர். 118 பந்துகளில் 133 ரன்களை பென் டக்கட் எடுத்துள்ள நிலையில், அவர் பேட்டிங் செய்ய வந்த ஆரம்பத்தில் வேகப்பந்துவீச்சாளர்களை அதிகம் பயன்படுத்தினார் ரோஹித். ஒருவேளை சுழற்பந்து வீச்சாளர்களை அவர் பயன்படுத்தியிருந்தால் பலன் கிடைத்திருக்கும் என்றும் தெரிகிறது.

இது பற்றி ரசிகர்களும் விமர்சனத்தை தெரிவித்து வரும் நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் கூட சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “பென் டக்கட் ஜீரோ ரன்னில் இருந்த போது நான் அவருக்கு பந்துவீச விரும்பியிருந்தேன். ஆனால் அவர் 60 ரன்களுக்கு மேல் அடித்த பின்னர் அவருக்கு பந்து வீச விரும்பவில்லை. ஏனென்றால், அதன் பின்னர் அவருக்கு பந்து வீசுவது கடினமாகி விட்டது. அவர் அடித்த சில ஷாட்கள் அருமையாக இருந்தது” என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த முறை பென் டக்கட்டை அஸ்வின் அவுட் எடுக்க நினைத்த நிலையில் தான், தனது குடும்பத்தின் மெடிக்கல் எமெர்ஜென்சி காரணமாக போட்டியின் பாதியிலேயே அவர் விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்