- Advertisement 3-
Homeவிளையாட்டுதமிழில் அசிங்கமான வார்த்தையை வீரரை பார்த்து சொன்னாரா அஸ்வின்?.. மைதானத்தில் நடந்தது என்ன.. சர்ச்சையை உண்டு...

தமிழில் அசிங்கமான வார்த்தையை வீரரை பார்த்து சொன்னாரா அஸ்வின்?.. மைதானத்தில் நடந்தது என்ன.. சர்ச்சையை உண்டு பண்ண ஆடியோ..

- Advertisement 1-

சமீப காலமாக கிரிக்கெட் போட்டிகளில் ஸ்டெம்பில் மைக் வைக்கப்பட்டு வருவதால் கிரிக்கெட் வீரர்கள் பேசும் பல்வேறு விஷயங்கள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் இணையத்தில் வைரல் ஆவதை நாம் பெரும்பாலும் கவனித்து இருப்போம். இந்திய அணியை பொறுத்தவரையில் கேப்டன் ரோகித் சர்மா பலமுறை வீரர்களை பற்றி ஏதாவது ஜாலியாக பேசுவதும், சில நேரத்தில் கோபப்பட்டு தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது தொடர்பான ஆடியோக்களும் பெரிய அளவில் வைரலாகி சர்ச்சையை உண்டு பண்ணும்.

இப்படி அசாதாரணமாக கிரிக்கெட் வீரர்கள் உரையாடுவது பற்றிய தகவல்கள் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி வைரல் ஆகி வரும் நிலையில் தற்போது ஐபிஎல் தொடரிலும் அப்படி ஒரு சம்பவம் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி இருந்த போட்டியில் கடைசி பந்தில் குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் கடைசி சில ஓவர்களுக்கு முன்பு வரை ராஜஸ்தான் அணியின் பக்கம் தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனாலும் கடைசி கட்டத்தில் ரஷீத் கான் மற்றும் ராகுல் தெவாட்டியா ஆகியோர் இணைந்து போட்டியை மாற்றி எழுதியதுடன் குஜராத் அணியை வெற்றி பெற வைத்தனர்.

தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்து ஆடி வரும் நிலையில் அவர் பெரும்பாலும் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுடன் தமிழ் மொழியில் உரையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

- Advertisement 2-

அப்படி இருக்கையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 17 வது ஓவரை வீசிக் கொண்டிருந்த சமயத்தில் தான் ஒரு பந்தை வீசுவதற்கு முன்பாக. ‘அந்த சனியன பின்னாடி போய் நிக்க சொல்லு’ என சஞ்சு சாம்சனிடம் கூறி இருந்தார்.

இதனைக் கேட்டதும் சஞ்சு சாம்சனும், ‘பின்னாடி நில்றா டேய்’ என்று அந்த வீரரிடமும் கூறுகிறார். இது எந்த வீரரை அஸ்வின் குறிப்பிட்டு சொன்னார் என்பது பற்றிய தகவல் சரி வர தெரியாத நிலையில் எந்த வீரராக இருந்தாலும் மைதானத்தில் இப்படி சனியன் என்ற வார்த்தையை அவர் உபயோகித்தது பெரிய அளவில் சர்ச்சையையும், அவருக்கு எதிரான விமர்சனங்களையும் உருவாக்கி உள்ளது.

ஆனால் அதே வேளையில், இந்த வீடியோவின் படி, அஸ்வின் மற்றும் சஞ்சு சாம்சன் பேசியது உண்மை தானா அல்லது அவர்கள் மீது வெறுப்பை உருவாக்க, வேண்டுமென்றே ரசிகர்கள் செய்த மிமிக்ரி வேலையா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

சற்று முன்