- Advertisement -
Homeவிளையாட்டுகோலி மேல இவ்ளோ கோவமா.. ஆர்சிபிக்கு எதிரா தோத்ததும் ஜடேஜா பாத்த வேலை..

கோலி மேல இவ்ளோ கோவமா.. ஆர்சிபிக்கு எதிரா தோத்ததும் ஜடேஜா பாத்த வேலை..

- Advertisement-

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பின்னர் ஜடேஜா செய்த விஷயம் என்று தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிக சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் கடைசி போட்டியில் மோதி முடித்து இரண்டு நாட்களான போதிலும் அந்த போட்டியை பற்றிய பேச்சு இன்னும் ஓய்ந்தபாடில்லை.

பல சீசன்களில் பெங்களூரு அணியை சிஎஸ்கே வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்த நிலையில் இந்த முறை அப்படியே நேர்மாறான சம்பவம் ஒன்று அரங்கேறி இருந்தது. ஆர்சிபி அணி வெற்றி பெறுவதுடன் மட்டுமில்லாமல் குறிப்பிட்ட ரன்களுடன் சிஎஸ்கேவை கட்டுப்படுத்தினால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலை இருந்தது.

அப்படி ஒரு சூழலில் அவர்கள் சிஎஸ்கேவை எதிர்த்து மிக ஆக்ரோஷமான ஆட்டத்தையும் போட்டி முழுக்க வெளிப்படுத்தி இருந்தனர். முதலில் பேட்டிங் செய்து 218 ரன்களை அவர்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே அணி 191 ரன்கள் மட்டும்தான் எடுத்திருந்தது. 201 ரன்களை சிஎஸ்கே தொட்டிருந்தால் நிச்சயம் அவர்கள் நான்காவது அணியாக ஆர்சிபிக்கு பதில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருப்பார்கள்.

ஆனால் அந்த வாய்ப்பு பறிபோனதற்கு மத்தியில் ஆர்சிபி வெற்றியை பலரும் கொண்டாடி வந்தாலும் சில விஷயங்கள் அதிக விமர்சனத்தை சந்தித்திருந்தது. சிஎஸ்கே பேட்டிங் செய்த சமயத்தில் ஆர்சிபி வீரர் கோலி, தேவையில்லாத விஷயங்களுக்கும் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

- Advertisement-

தொடர்ந்து ஆர்சிபி வெற்றி பெற்ற சமயத்தில் பெங்களூரு முழுக்க ரசிகர்கள் கூடி சிஎஸ்கே ரசிகர்கள் பலரையும் அவமதித்திருந்த செயலும் கடும் கண்டனத்தை பெற்றிருந்தது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறினால் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டுமா என ஆர்சிபி ரசிகர்கள் மீது கடுமையான விமர்சனங்களும் எழுந்திருந்தது.

இதற்கு மத்தியில் ரசிகர் ஒருவரின் பதிவுக்கு ஜடேஜா கொடுத்த லைக் அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவர் குறிப்பிட்ட பதிவில், ஜடேஜா புகைப்படத்துடன் “ரோஹித் மற்றும் கோலி என இருவரும் இல்லை. தோனிக்கு எப்போதுமே ஆதரவாக நின்றவர் ஜடேஜா” என குறிப்பிட்டு 2019 இறுதி போட்டி, 2023 ஐபிஎல் கோப்பை வெற்றி மற்றும் 2024 ஆம் ஆண்டு ஆர்சிபிக்கு எதிராக ஜடேஜாவின் பேட்டிங் என தோனிக்கு ஆதரவாக ஜடேஜா நின்ற முக்கியமான போட்டிகளையும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு ஜடேஜா எக்ஸ் தளத்தில் லைக் ஒன்றை போட, கோலி மற்றும் ரோஹித்திற்கு எதிரான ரூட்டை அவர் எடுத்துள்ளாரா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.

சற்று முன்