- Advertisement 3-
Homeவிளையாட்டுகபில்தேவ், அஸ்வினுக்கு அடுத்து ஜடேஜா மட்டும் தான்.. இந்திய கிரிக்கெட்டில் பலரும் நெருங்காத அரிய சாதனை..

கபில்தேவ், அஸ்வினுக்கு அடுத்து ஜடேஜா மட்டும் தான்.. இந்திய கிரிக்கெட்டில் பலரும் நெருங்காத அரிய சாதனை..

- Advertisement 1-

முதல் டெஸ்டில் அதிரடியாக ஆடி 80 ரன்களுக்கு மேல் குவித்திருந்த ரவீந்திர ஜடேஜா, சில முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஆனாலும் இங்கிலாந்து அணியில் சில வீரர்கள் சிறப்பாக ஆடியதால் அந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருந்தது. முதல் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது டெஸ்டில் விலகி இருந்த ரவீந்திர ஜடேஜா, மீண்டும் மூன்றாவது போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்கியுள்ளார்.

தேசிய கிரிக்கெட் அகாடமியில் வேகமாக பயிற்சி பெற்று தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ள ஜடேஜா, இந்த போட்டியின் முதல் நாளிலேயே பட்டையை கிளப்பி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்ய 33 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து ஆட்டம் கண்டது. இங்கிலாந்தின் கை அதிகம் ஓங்கி இருந்ததால் போட்டியும் அவர்கள் பக்கம் தான் திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் இணைந்த ரோஹித் மற்றும் ஜடேஜா ஆகியோர் அசத்தலாக பேட்டிங் செய்தனர்.

ரோஹித் 131 ரன்கள் எடுக்க, ஜடேஜா 110 ரன்களுடன் தற்போதும் களத்தில் உள்ளார். இந்திய அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக சிறந்த ஆல் ரவுண்டராக விளங்கி வரும் ஜடேஜா, டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 என அனைத்து வடிவிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் தனது முழு திறனை நிரூபித்து வருகிறார். அதற்கு உதாரணமாக இந்த போட்டியிலும் அனுபவம் இல்லாத இளைஞர்களுக்கு மத்தியில் முன் வரிசையில் களமிறங்கி பொறுப்புடன் ஆடி சதமடித்த ஜடேஜாவையும் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தான் இந்த போட்டியில் மிக முக்கியமான ஒரு சாதனை ஒன்றையும் ரவீந்திர ஜடேஜா செய்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. இந்திய அணியில் ஆல் ரவுண்டர்களாக ஜொலித்த சில முக்கியமான வீரர்கள் செய்த சாதனை பட்டியலில் தற்போது ரவீந்திர ஜடேஜாவும் இணைந்துள்ளார். முன்னதாக டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஒருவர் 3000 ரன்கள் சேர்த்தும், 200 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளும் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் உள்ளார்.

- Advertisement 2-

இவர் 5248 ரன்களை பேட்டிங்கில் எடுத்து 434 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார். இவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் அஸ்வின் 3271 ரன்களுடன் 499 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். அந்த வரிசையில் தான் ஜடேஜா தற்போது சதமடித்ததன் மூலம் 3003 ரன்கள் குவித்துள்ள நிலையில், 250 விக்கெட்டுகளை வீழ்த்தி இதில் மூன்றாவது வீரராகவும் அவர் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்