- Advertisement 3-
Homeவிளையாட்டுதோனி ஓய்வா? இதெல்லாம் இருக்கும்போது அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல. பேட்டிங் வரிசை செமையா இருக்கு -...

தோனி ஓய்வா? இதெல்லாம் இருக்கும்போது அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல. பேட்டிங் வரிசை செமையா இருக்கு – பிராவோ கருத்து

- Advertisement 1-

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் வேளையில் சென்னை அணி முதல் அணியாக இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது. அதேவேளையில் மற்றொரு புறம் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நாளை அகமதாபாத் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றனர்.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் சென்னை அணியை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்தே அதிகமாக பேசப்படும் விடயமாக தோனியின் ஓய்வு இருந்து வருகிறது. ஏனெனில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை வென்ற கையோடு தோனி ஓய்வு பெறுவார் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதே வேளையில் அடுத்த சீசனில் மீண்டும் சென்னை அணிக்காக தோனியை பார்க்க முடியுமா? என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருந்து வருகிறது. தோனியும் தனது ஓய்வு குறித்து அளித்த சில கருத்துகளில் : இன்னும் எனது ஓய்வு குறித்த முடிவினை எடுக்க ஏழு எட்டு மாதங்கள் இருக்கிறது. தற்போது அதைப்பற்றி யோசிக்க விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான பிராவோ கூறுகையில் : தோனி 100% அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார். ஏனென்றால் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இருப்பதால் தோனியின் கரியர் தற்போது நீடித்துள்ளது. அதேபோல் தோனி பேட்டிங்கில் கீழ் வரிசையில் தான் விளையாடுவார். நிச்சயம் மிடில் ஆர்டரில் சிவம் துபே, ரஹானே போன்ற வீரர்கள் இருப்பதால் சென்னை அணியின் பேட்டிங் வரிசை பலம் அடைந்துள்ளது.

- Advertisement 2-

தோனியிடம் இருந்த அழுத்தம் தற்போது சற்றே குறைந்துள்ளது. அவர் அமைதியாக தனது வேலையை செய்து வருகிறார். நிச்சயம் அவர் அடுத்த ஆண்டும் சென்னை அணிக்காக விளையாடுவார் என பிராவோ கூறியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த செய்தி உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: களத்துல சிரிக்கறதா அம்பயரோட வேல? தோனி நடுவர்கள கவர்றாரு. இந்த சமயத்துல உடனே அம்பயர்கள் நிலமையைக் கட்டுப்படுத்த வேணாமா? கடுப்பாக ட்வீட் போட்ட ஆஸி. வீரர்

அதே வேலையில், ஏற்கனவே ரெய்னா போன்றோரும் இது போன்ற தகவலை ஏற்கனவே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பின் இறுதி போட்டி எங்கு நடந்தாலும் அங்கு தோனியின் ரசிகர் படை அவரை காண குவியும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.

சற்று முன்